'களவாணி' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சற்குணம் தொடர்ந்து 'வாகை சூட வா', 'நையாண்டி', 'சண்டிவீரன்', 'களவாணி 2' உள்ளிட்ட வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளார்.
இவர் அடுத்ததாக அதர்வாவை வைத்து மீண்டும் ஒரு படத்தை இயக்கவுள்ளார். இதில் அவருடன் இணைந்து ராஜ்கிரண், ராதிகா சரத்குமார், சிங்கம்புலி, ஆர்.கே. சுரேஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் பூஜை இன்று (ஜூலை 16) சென்னையில் எளிமையான முறையில் நடைபெற்றது. மேலும் படப்பிடிப்பு திருவையாறு, தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் நடைபெறவுள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.
அதர்வா நடிப்பில் தற்போது உருவாகியுள்ள 'தள்ளிப்போகாதே', 'குருதி ஆட்டம்' ஆகிய படங்கள் வெளியீட்டுக்குத் தயாராக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே சற்குணம் இயக்கத்தில், அதர்வா நடிப்பில் வெளியான 'சண்டிவீரன்' படம் நல்ல வரவேற்பைப் பெற்றதால், இப்படம் மீது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதையும் படிங்க: சொந்தத் தயாரிப்பு நிறுவனத்தின் படத்தில் நடிக்கும் டாப்சி