சாக்லெட், நைன், விக்டோரியா அண்ட் அப்துல் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தும், பிரபல் ஜேம்ஸ் பாண்ட் சீரிஸில் ’எம்’ எனும் பிரபல கதாபாத்திரத்தில் தோன்றியும் ரசிகர்களை இன்றளவும் தன் வசமாக்கி விருதுகளைக் குவித்து வருபவர் பழம்பெரும் ஹாலிவுட் நடிகை ஜூடி டென்ச்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
பிரிட்டனைச் சேர்ந்த பிரபல வோக் நாளிதழின் அட்டைப்படத்தில், சமீபத்தில் தோன்றியுள்ள 85 வயதான ஜூடி டென்ச், வயது ’ஆட்டிட்யூட்’ ஐ வழங்கவல்லது எனும் ஆங்கில பழமொழியை தான் ஏற்கவில்லை என்றும், வயது முதிர்வில் ரசிப்பதற்கோ, மகிழ்வதற்கோ ஒன்றுமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
வயது முதிர்வை தான் கொஞ்சமும் ரசிக்கவில்லை என்றும், தான் இது குறித்து சிந்திக்க விரும்பவில்லை, இது மிகவும் கொடுமையானது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் 85 வயதை எட்டியுள்ள அவரது, சக நடிகை மேகி ஸ்மித்தும் வயது முதிர்வால், ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படுமோ எனக் கவலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
2017 ஆம் ஆண்டில் பார்வைக் குறைபாடு காரணமாக வாகனம் ஓட்டுவதைக் கைவிட வேண்டியக் கட்டாயத்திற்கு தள்ளப்பட்ட ஜூடி டென்ச், வாழ்வில் பிறரைச் சார்ந்திருப்பது வேதனையானது எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : ஹஸ்முக் தொடருக்கு தடை கோரிய மனு தள்ளுபடி