ETV Bharat / sitara

'அசுர குரு' படத்தின் இசை வெளியீட்டு விழா

சென்னை: ஜேபிஎஸ் பிலிம்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் ராஜ்தீப் இயக்கத்தில் நடிகர் விக்ரம் பிரபு நடிக்கும் 'அசுர குரு' படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

அசுர குரு இசை விளையாட்டு விழா
author img

By

Published : Jul 7, 2019, 12:12 PM IST

ஜேபிஎஸ் பிலிம்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் ராஜ்தீப் இயக்கத்தில் நடிகர் விக்ரம் பிரபு நடிக்கும் படம் அசுர குரு. இந்த படத்தில் நடிகை மகிமா நம்பியார், யோகிபாபு, பாகுபலி சுப்பாராஜ், மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப்பில் நடைபெற்றது. இதில் நடிகர் விக்ரம் பிரபு, நடிகை மகிமா நம்பியார், இயக்குனர் பாக்கியராஜ் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

அசுர குரு இசை விளையாட்டு விழா

விழாவில் நடிகர் விக்ரம் பிரபு பேசுகையில், இது மிகவும் சந்தோஷமான நாள். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. அறிமுக இயக்குநர்களுடன் பணிபுரிவது நல்ல விஷயம். அவர்களிடமிருந்து நானும் அதிக அளவில் கற்றுக்கொள்கிறேன். அசுர குரு படத்தில் கதை எங்களுக்கு அதிக வேலை கொடுத்தது. அதிகமாக வேலை வாங்கியது. இந்த படம் முழுவதும் நல்ல டீம் ஒர்க் உள்ளது என்றார்.

Intro:அசுர குரு படத்தின் இசை வெளியீட்டு விழா
Body:ஜே.பி.எஸ்.பிலிம்ஸ் சார்பில் அறிமுக இயக்குனர் ராஜ்தீப் இயக்கும் படம் அசுர குரு. படத்தில் நடிகர் விக்ரம் பிரபு மகிமா நம்பியார் . பாகுபாலி சுப்பாராஜ், யோகிபாபு, நாகிநீடு, ஜெகன், குமரவேல், மனோபாலா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது இந்த விழாவில் நடிகர் விக்ரம் பிரபு இயக்குனர் பாக்யராஜ் நடிகை மஹிமா நம்பியார் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்

விழாவில் நடிகர் விக்ரம் பிரபு பேசுகையில்,

இது மிகவும் சந்தோஷமான நாள் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய இருந்தோம். அறிமுக இயக்குனர் களோடு பணிபுரிவது நல்ல விஷயம். அவர்களிடமிருந்து நானும் அதிக அளவில் கற்றுக்கொள்கிறேன். அசுர குரு படத்தில் கதை எங்களுக்கு அதிக வேலை கொடுத்து. அதிகமாக வேலை வாங்கியது. முழுக்க முழுக்க இந்த படத்தில் ஒரு நல்ல டீம் ஒர்க் உள்ளது. இந்த படம் கமர்சியல் படம் என்றும் சொல்லலாம். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் ஆக்சன் திரில்லர் படம் இது. நான் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதற்கு காரணம். வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டிய தேவை எனக்கு இருப்பதால்தான். நான் பணியாற்றிய இயக்குநர்கள் அனைவரும் மிகவும் வித்தியாசமான இயக்குனர்கள். அவர்களிடம் இருந்து நான் கற்றுக் கொள்வதும் அனுபவித்த விஷயங்களும் அதிகம். அசுர குரு படத்தின் இயக்குனர் ஒரு நல்ல இயக்குனராக வருவார் என்று நம்புகிறேன். நல்ல கதையோட வந்ததால் இப்போது ஒரு நல்ல படமாக முடித்து வைத்து இருக்கிறார்.

நடிகை மஹிமா நம்பியார் பேசுகையில்,

பொதுவா எல்லாரும் வித்தியாசமான கேரக்டரில் நடித்துள்ளேன் என்று சொல்வார்கள். ஆனால், எனக்கு உண்மையிலேயே இந்த படத்தில் வித்தியாசமான கதாபாத்திரம் அமைந்துள்ளது. எனது முந்தைய படங்களில் ஒரு கிராமத்து பெண்ணாக தான் நடித்திருந்தேன். ஆனால், இந்த படத்தில் மிகவும் போல்டான ஒரு பெண்ணாக நடித்துள்ளேன். இயக்குனர் என்னிடம் கதை கூறும் பொழுது இது ஒரு டிடெக்டிவ் ஏஜென்சி கதை இதில் நீங்கள் நடிக்க வேண்டும் என்றார். அவரிடம் இந்த படத்தில் நான் நடித்தால் நன்றாக இருக்குமா என்று கேட்டேன். இந்தப் படத்தில் நடிப்பதற்கு மிகவும் பயந்து கொண்டிருந்தேன். ஆனால் இப்பொழுது முழு நம்பிக்கையுடன் நடித்து முடித்துள்ளேன் .அதற்காக இயக்குனருக்கு நன்றி .இந்த படத்தில் நான் பைக் ஓட்டி இருக்கிறேன் . சிகரெட் பி டித்திருக்கிறேன் நான் செயின் ஸ்மோக்கர் எல்லாம் கிடையாது. இந்த படத்தில் தேவை என்றார்கள் அதனால் நடித்தேன். இந்த படத்தில் பைக் ஓட்டுவதற்கு இயக்குனர் மாதிரிகளை கொடுத்தார் பைக் ஓட்டுவது ஷூட்டிங் வருவதற்கு முன்பாகவே கற்றுக் கொண்டு வந்தேன். ஆனால் முதல் நாள் சூட்டிங் முதல் ஷாட்டில் விக்ரம் பிரபுவை வைத்து நான் பைக் ஓட்ட வேண்டும். ஒரு மணி நேரமாக நான் பைக்கை ஸ்டார்ட் செய்து கொண்டிருந்தேன் அதை ஸ்டார்ட் ஆகவில்லை . பிரேக் எடுத்து வந்து மீண்டும் அந்த காட்சியை எடுத்தோம் Conclusion:விக்ரம் பிரபு மிகவும் ப்ரொபஷனல் நடிகர் அவருடன் நான் மிகவும் சந்தோஷமாக பணியாற்றினேன்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.