நடிகை நித்யா மேனன், ரித்து வர்மா ஆகியோருடன் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகிறார் நடிகர் அசோக் செல்வன்.
அனி சசி என்னும் அறிமுக இயக்குநர் இயக்கும் திரைப்படத்தில் பருமனான சமையல் கலைஞர் பாத்திரத்தில் அசோக் நடிக்கிறார். 100 கிலோ எடையுடைய சமையல் கலைஞர் பாத்திரத்தில் நடிக்க 20 கிலோ எடை கூடியுள்ளாராம் அசோக் செல்வன்.
திரைப்படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடைபெறவுள்ள நிலையில் தனது பாத்திரத்திற்காக அசோக் செல்வன் ப்ரோஸ்தட்டிக் மேக்-அப் அணியவுள்ளாராம்.
இதற்கு முன்பாக மாயா என்னும் குறும்படத்துக்காக அசோக் செல்வனும் இயக்குநர் அனி சசியும் இணைந்து பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. ரொமான்டிக் காமெடியாக உருவாகவுள்ள இத்திரைப்படத்தில் நாசர், சத்யா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். இப்படத்தில் தனது கதாபாத்திரத்தை சிறப்பாகச் செய்ய அசோக் செல்வன் தெலுங்கு கற்றுவருகிறாராம்.
இதையும் படிங்க: நாகேஷுடன் கனெக்ட் ஆகும் சந்தானம்