'அவன் இவன்' படத்தை தொடர்ந்து நடிகர்கள் ஆர்யா - விஷால் இணைந்து நடிக்கும் படம் 'எனிமி'. இப்படத்தை 'இருமுகன்', 'அரிமா நம்பி', 'நோட்டா' போன்ற படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கியுள்ளார்.
இப்படத்தில் ஆர்யா - விஷாலுடன் மம்தா மோகன்தாஸ், மிருணாளினி, பிரகாஷ்ராஜ், கருணாகரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மினி ஸ்டூடியோஸ் சார்பில் வினோத்குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசை அமைக்க சாம் சி.எஸ். பின்னணி இசையமைத்துள்ளார்.
ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில், சென்னை, சிங்கப்பூர் உள்ளிட்டப் பல்வேறு இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது.
-
Loved fighting out with #Enemy @VishalKOfficial 🥊🥊😘😘
— Arya (@arya_offl) July 24, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Watch here (TAMIL) - https://t.co/GH9VCm62zb#ENEMY @anandshank @vinod_offl @MusicThaman @SamCSmusic @RDRajasekar @prakashraaj @shankaruppusamy @mirnaliniravi @mamtamohan @Thangavelramal1 @RIAZtheboss @divomovies
">Loved fighting out with #Enemy @VishalKOfficial 🥊🥊😘😘
— Arya (@arya_offl) July 24, 2021
Watch here (TAMIL) - https://t.co/GH9VCm62zb#ENEMY @anandshank @vinod_offl @MusicThaman @SamCSmusic @RDRajasekar @prakashraaj @shankaruppusamy @mirnaliniravi @mamtamohan @Thangavelramal1 @RIAZtheboss @divomoviesLoved fighting out with #Enemy @VishalKOfficial 🥊🥊😘😘
— Arya (@arya_offl) July 24, 2021
Watch here (TAMIL) - https://t.co/GH9VCm62zb#ENEMY @anandshank @vinod_offl @MusicThaman @SamCSmusic @RDRajasekar @prakashraaj @shankaruppusamy @mirnaliniravi @mamtamohan @Thangavelramal1 @RIAZtheboss @divomovies
படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியபோது, கரோனாவின் இரண்டாவது அலையால் பணிகள் நிறுத்தப்பட்டன. கரோனாவின் பரவல் குறைந்ததையடுத்து, எஞ்சியிருந்த படப்பிடிப்புகள் ஹைதராபாத் ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில், சமீபத்தில் நிறைவுற்றது.
இந்நிலையில், தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. அதில் ஆர்யாவும் விஷாலும் நண்பர்களாக இருந்து பின் எனிமியாக மாறியது போன்று அதிரடி காட்சிகள் காட்டப்பட்டுள்ளது.