'மிருதன்’, ‘டிக் டிக் டிக்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய சக்தி சௌந்தர் ராஜன் ஆர்யாவை வைத்து டெடி படத்தை இயக்கிவருகிறார். இப்படத்தில் ஆர்யா, சாயிஷா, கருணாகரன், சதீஷ், மகிழ் திருமேனி, மாசூம் ஷங்கர், சாக்ஷி அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்கள் பலரும் தங்களது படத்திற்காக உடல் எடையை அதிகரிப்பது, குறைப்பது போன்ற முயற்சியில் இறங்கியுள்ளனர். அந்தப் பட்டியலில் புதிதாக நடிகர் ஆர்யா இணைந்துள்ளார்.
-
7 months of gym cardio and Boxing had this effect on me. Wouldn’t have been possible without my Trainers #Jai #Johnson #santhosh #Thiru #Prasad #Monsters #chennaiMMA #ignite101 #touchgym They all had my back covered 😉Love u all 😘😘😘🤗 pic.twitter.com/8unN8QyySo
— Arya (@arya_offl) March 6, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">7 months of gym cardio and Boxing had this effect on me. Wouldn’t have been possible without my Trainers #Jai #Johnson #santhosh #Thiru #Prasad #Monsters #chennaiMMA #ignite101 #touchgym They all had my back covered 😉Love u all 😘😘😘🤗 pic.twitter.com/8unN8QyySo
— Arya (@arya_offl) March 6, 20207 months of gym cardio and Boxing had this effect on me. Wouldn’t have been possible without my Trainers #Jai #Johnson #santhosh #Thiru #Prasad #Monsters #chennaiMMA #ignite101 #touchgym They all had my back covered 😉Love u all 😘😘😘🤗 pic.twitter.com/8unN8QyySo
— Arya (@arya_offl) March 6, 2020
இந்நிலையில், ஆர்யாவின் 30ஆவது படத்தை பா. இரஞ்சித் இயக்கவுள்ளார். இப்படம் 1970களில் நடந்த குத்துச்சண்டையை மையப்படுத்தி எடுக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதில் ஆர்யாவுக்கு ஜோடியாக துஷாரா நடிக்க, கலையரசன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இதற்காக ஆர்யா உடற்பயிற்சி கூடத்தில் கடுமையாக வொர்க் அவுட் செய்து எடையை அதிகரித்து ஃபிட்டாக வைத்துள்ளார். சமீபத்தில் ஃபிட் புகைப்படத்தை ஆர்யா தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். புகைப்படம் வெளியான சில நிமிடங்களில் வைரலானது.
தற்போது ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், 'ஏழு மாதமாக ஜிம் - குத்துச்சண்டையில் மேற்கொண்ட பயிற்சியால் எனது உடம்பில் இத்தனை மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. பயிற்சியாளர்கள் இல்லாமல் இது சாத்தியமில்லை' எனக் கூறி ஏழு மாதங்களுக்கு முன்பு உள்ள புகைப்படத்தையும் தற்போதைய புகைப்படத்தையும் இணைத்து வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படம் இப்போது சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.