இயக்குநர் பா.ரஞ்சித், ஆர்யாவை வைத்து இயக்கியுள்ள படம் 'சார்பட்டா பரம்பரை'. வடசென்னையின் பாரம்பரிய விளையாட்டான குத்துச்சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் பசுபதி, கலையரசன் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர்.
இப்படத்திற்காக ஆர்யா உடற்பயிற்சி மேற்கொண்டு தனது உடலை கட்டுமஸ்தாக மாற்றினார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலானது. சந்தோஷ் சிவன் இசையமைக்கும் இந்தப்படத்தை கே9 ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது.
ஊரடங்கு - தள்ளிப்போன ரிலீஸ்
இப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து ரிலீசுக்குத் தயாராக இருந்த நிலையில், கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதை அடுத்து, தொடர்ந்து படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போன வண்ணம் இருந்தது.
-
Destined to be the BEST🥊
— Arya (@arya_offl) July 12, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Trailer out tomorrow
#SarpattaOnPrime July 22, @PrimeVideoIN@beemji @officialdushara @Actorsanthosh @johnkokken1 @shabzkal @KalaiActor @actorjohnvijay @officialneelam @K9Studioz @joinmaajja @Music_Santhosh @EditorSelva @ActorMuthukumar @anbariv pic.twitter.com/nbWpqW3177
">Destined to be the BEST🥊
— Arya (@arya_offl) July 12, 2021
Trailer out tomorrow
#SarpattaOnPrime July 22, @PrimeVideoIN@beemji @officialdushara @Actorsanthosh @johnkokken1 @shabzkal @KalaiActor @actorjohnvijay @officialneelam @K9Studioz @joinmaajja @Music_Santhosh @EditorSelva @ActorMuthukumar @anbariv pic.twitter.com/nbWpqW3177Destined to be the BEST🥊
— Arya (@arya_offl) July 12, 2021
Trailer out tomorrow
#SarpattaOnPrime July 22, @PrimeVideoIN@beemji @officialdushara @Actorsanthosh @johnkokken1 @shabzkal @KalaiActor @actorjohnvijay @officialneelam @K9Studioz @joinmaajja @Music_Santhosh @EditorSelva @ActorMuthukumar @anbariv pic.twitter.com/nbWpqW3177
ஓடிடியில் ரிலீஸ்
இப்படத்தின் வெளியீட்டு உரிமத்தை அதிக விலைகொடுத்து முன்னணி ஓடிடி தளமான அமேசான் பிரைம் சமீபத்தில் வாங்கியது. தொடர்ந்து இப்படம் அமேசான் பிரைமில், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஜூலை 22ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இப்படத்தின் ட்ரெய்லர் நாளை (ஜூலை.13) வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ’சார்பேட்டா ’ படத்தின் கதாபாத்திரங்கள் அறிமுக வீடியோ வெளியீடு!