ETV Bharat / sitara

போங்கு செய்த சதீஸ்... போட்டுக் கொடுத்த ஆர்யா! - maatraan

நகைச்சுவை நடிகர் சதீஸ் செய்த ஏமாற்று வேலையை நடிகர் ஆர்யா தனது செல்ஃபோனில் காணொலி எடுத்து அதனை வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளார்.

arya
author img

By

Published : Oct 11, 2019, 11:48 AM IST

Updated : Oct 12, 2019, 12:08 AM IST

தமிழ் திரைப்படங்களில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆர்யா. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'மகாமுனி', 'காப்பான்' ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. அதிலும் மகாமுனி திரைப்படத்தில் இரட்டை வேடங்களில் நடித்திருந்த ஆர்யா தனது மாறுபட்ட நடிப்பின் மூலமாக அனைத்துவிதமான சினிமா ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றார்.

அதைத் தொடர்ந்து நடிகர் சூர்யாவுடன் 'மாற்றான்' படத்தில் நடித்திருந்த ஆர்யா தனது இயல்பான பாணியில் துறுதுறுப்பான இளைஞனாக அசத்தியிருந்தார். 'மாற்றான்' படம் கலவையான விமர்சனம் பெற்றாலும் 100 கோடி வசூல் செய்தது. இதன் வெற்றி விழாவை நேற்று படக்குழு கொண்டாடியது.

எப்போதும் கலகலப்பான மனோபாவம் கொண்ட நடிகர் ஆர்யா, தனது திரையுலக நண்பர்களுடன் எளிமையாக பழகக் கூடியவர். அதுமட்டுமில்லாமல் சில சமயங்களில் அவர்களுடன் கேளிக்கைகளிலும் ஆர்யா ஈடுபடுவதுண்டு. அந்த வகையில் நகைச்சுவை நடிகர் சதீஸ் செய்த போங்கை ஆர்யா காணொலி மூலமாக வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளார்.

நகைச்சுவை நடிகர் சதீஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் காணொலி ஒன்றை பதிவிட்டார். அந்தக் காணொலியில் அவர் தூரமாக நின்றுகொண்டு ஒரு குடுவையில் பேனாவை துல்லியமாக எறிகிறார். பின்னர் திரும்பி நின்றுகொண்டும் சதீஸ் மீண்டும் மற்றொரு பேனாவை எறிகிறார்.

சதீஸின் இந்தக் காணொலியைப் பார்த்த ஆர்யாவும் ஒரு காணொலியைப் பதிவிட்டார். ஆர்யா பதிவிட்ட காணொலியில், இரண்டு பேர் நின்றுகொண்டு ஒரு குடுவையில் நீளமான கம்பி போன்ற ஒரு பொருளை ஒருவர் போடுகிறார். மற்றொருவர் அதனை தனது செல்ஃபோனில் படம்பிடித்துக்கொண்டிருக்கிறார்.

பின்னர் நகைச்சுவை நடிகர் சதீஸ் ஏதோ சாதனை செய்தது போன்று அவர்களிடம் செல்கிறார். இறுதியாக அந்தக் காணொலியில் தோன்றும் ஆர்யா எல்லாம் பொய் என்று கூறி சதீஸ் செய்த போலி சாதனையை வெளி உலகுக்கு தெரிவித்தார். ஆர்யா காணொலி எடுப்பதைப் பார்த்த சதீஸ் மாட்டிக்கிட்டோம்டா என்பது போன்று எக்ஸ்பிரஷன் கொடுத்து தனது முகத்தை மூடிக்கொண்டார்.

Intro:Body:Conclusion:
Last Updated : Oct 12, 2019, 12:08 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.