சில வருடங்களுக்கு முன்பு டிஸ்னி நிறுவனத்தின் அனிமேஷன் படமான 'லயன் கிங்' திரைப்படத்தை மீண்டும் 'தி லயன் கிங்' என்ற பெயரில் தொழில்நுட்ப உதவியுடன் முழு நீள திரைப்படமாக உருவாக்கியுள்ளது. 'லயன் கிங்' அனிமேஷன் படத்திற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர்.
'தி லயன் கிங்' படத்தை 'அயர்ன் மேன்', 'தி ஜங்கிள் புக்' திரைப்படத்தை இயக்கிய ஜான் ஃபேவ்ரூ இயக்கியுள்ளார். இப்படம் ஜூலை 19ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் தமிழ் பதிப்பில் 'ஸ்கார்’ கதாபாத்திரத்திற்கு நடிகர் அரவிந்த் சாமி பின்னணி குரல் கொடுத்துள்ளார்.
-
Last time it was Simba, this time we chose Scar.. had a lot of fun doing it. Hope u guys like it pic.twitter.com/t9NoRcUcM5
— arvind swami (@thearvindswami) June 28, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Last time it was Simba, this time we chose Scar.. had a lot of fun doing it. Hope u guys like it pic.twitter.com/t9NoRcUcM5
— arvind swami (@thearvindswami) June 28, 2019Last time it was Simba, this time we chose Scar.. had a lot of fun doing it. Hope u guys like it pic.twitter.com/t9NoRcUcM5
— arvind swami (@thearvindswami) June 28, 2019
இது குறித்து அரவிந்த் சாமி கூறுகையில், 'தி லயன் கிங்' தமிழ் பதிப்பிற்காக டப்பிங் பேச என்னை தொடர்பு கொண்டபோது, ஸ்கார் கதாபாத்திரத்திற்கு டப்பிங் செய்ய விரும்பினேன். ஏனெனில், அந்த கதாபாத்திரம் மிகவும் சுவாரஸ்யமான பல பரிமாணங்களைக் கொண்டது. சில வருடங்களுக்கு முன்பு இதே 'லயன் கிங்' அனிமேஷன் படத்தில் சிம்பாவுக்கு டப்பிங் செய்தேன். அப்போது அனிமேஷன் படத்திற்கு டப்பிங் செய்வது சிறந்த கற்றல் அனுபவமாக இருந்தது என்று தெரிவித்தார்.
'தி லயன் கிங்' படத்தின் தமிழ் பதிப்பில் 'சிம்பா' கதாபாத்திரத்திற்கு நடிகர் சித்தார்த் குரல் கொடுத்துள்ளார். அதேபோல், இந்தி பதிப்பில் முபாசா கதாபாத்திரத்திற்கு நடிகர் ஷாருக்கானும் சிம்பா கதாபாத்திற்கு அவரது மகன் ஆரியனும் குரல் கொடுத்துள்ளனர்.