'துருவங்கள் பதினாறு' த்ரில்லர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இளம் இயக்குநர் கார்த்திக் நரேன். இவர் அடுத்ததாக இயக்கிய நரகாசூரன் திரைப்படம் வெளியாகாத நிலையில் கார்த்திக் நரேன் நடிகர் அருண் விஜய், பிரியா பவானி சங்கர், பிரசன்னா ஆகியோரை வைத்து 'மாஃபியா: சாப்டர் 1' என்னும் படத்தை இயக்கியுள்ளார்.
இந்தத் திரைப்படத்தின் டீசர் கடந்த செப்டம்பர் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இத்திரைப்படத்தின் டீசரில் இடம்பெற்ற காட்சிகள் அருண் விஜய் மற்றும் பிரசன்னா ஆகியோர் இடையே நடக்கும் மோதல்களை விவரித்தன. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இத்திரைப்படம் டிசம்பர் முதல் வாரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
DIWALI 💥🔥 wishes to all from the #Beast 😈 & the #Hunter 🔫
— Lyca Productions (@LycaProductions) October 27, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
Team #MAFIA 🍁@karthicknaren_M @arunvijayno1 🦁 @Prasanna_actor 🦊 @priya_Bshankar @DoneChannel1 #HappyDiwali pic.twitter.com/WVxtm9w0ug
">DIWALI 💥🔥 wishes to all from the #Beast 😈 & the #Hunter 🔫
— Lyca Productions (@LycaProductions) October 27, 2019
Team #MAFIA 🍁@karthicknaren_M @arunvijayno1 🦁 @Prasanna_actor 🦊 @priya_Bshankar @DoneChannel1 #HappyDiwali pic.twitter.com/WVxtm9w0ugDIWALI 💥🔥 wishes to all from the #Beast 😈 & the #Hunter 🔫
— Lyca Productions (@LycaProductions) October 27, 2019
Team #MAFIA 🍁@karthicknaren_M @arunvijayno1 🦁 @Prasanna_actor 🦊 @priya_Bshankar @DoneChannel1 #HappyDiwali pic.twitter.com/WVxtm9w0ug
இதனிடையே இன்று தீபாவளி பண்டிகையையொட்டி 'மாஃபியா: சாப்டர் 1' படத்தின் புதிய போஸ்டரை படத்தயாரிப்பு நிறுவனம் ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. கத்தி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்த லைகா நிறுவனம் அதன்பின் பல்வேறு படங்களைத் தயாரித்துள்ளது. அந்நிறுவனம் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள தர்பார் படத்தின் புதிய போஸ்டரையும் நேற்று வெளியிட்டது.
அதேபோல் லைகா தயாரிப்பில் சரவணன் இயக்கத்தில் த்ரிஷா நடித்துள்ள 'ராங்கி' பட போஸ்டரும் காமெடி நடிகர்கள் யோகி பாபு, கருணாகரண் உள்ளிட்டோர் நடித்துள்ள 'பன்னி குட்டி' பட போஸ்டரும் இன்று வெளியிடப்பட்டுள்ளது.