நடிகர் அருண் விஜய் நடிப்பில், இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘குற்றம் 23’. திரில்லர் பாணியில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதைத்தொடர்ந்து இந்த வெற்றிக் கூட்டணியில் மீண்டும் ‘AV31' திரைப்படம் உருவாகியுள்ளது.
ராகவேந்திரா தயாரிக்கும் இப்படம் உளவு சம்பந்தமான திரில்லர் படமாக உருவாகியுள்ளது. ரெஜினா கசாண்ட்ரா நாயகியாக நடிக்க, ஸ்டெஃபி படேல் மற்றும் பகவதி பெருமாள் முக்கியப் பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் தற்காலிகமாக ‘AV31' என்று அழைக்கப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், அருண் விஜய் தனது டப்பிங் பணிகளைத் தொடங்கியுள்ளார். மேலும் ரசிகர்களால் மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட இப்படத்தை, கோடை விடுமுறையில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. தொடர்ந்து படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீஸர், ட்ரெய்லர் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு அருண் விஜய் நடிப்பில் சினம், அக்னி சிறகுகள், AV32 என வரிசையாக வெளியாக உள்ளது.
இதையும் படிங்க: ஜகமே தந்திரம் டீசரில் பெயர் இல்லை - கோபத்தில் உள்ளாரா தனுஷ்?