ஹைதராபாத் : சென்னை லயோலா கல்லூரியில் பயின்று சினிமா துறையில் நுழைந்தவர்களில் அருள் நிதியும் ஒருவர். தமிழரசு- மோகனா தம்பதியருக்கு மகனாக 1987ஆம் ஆண்டு ஜூலை 21ஆம் தேதி சென்னையில் பிறந்தார்.
இவர் மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு. கருணாநிதியின் பேரன் ஆவார். இள வயதிலேயே சினிமா மீது தீவிர ஆசை கொண்டிருந்த அருள் நிதி, பாண்டிராஜின் வம்சம் படத்தில் அன்பரசு என்ற கதாப்பாத்திரத்தில் அறிமுகமானார்.
![Arulnithi Birthday special 2021](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/e0ouw4aviaqdcy3_2107newsroom_1626835763_308.jpg)
இந்தப் படத்தில் வரும் வசனங்கள் இன்றளவும் உயிரோட்டமாக பேசப்பட்டுவருகின்றன. இந்தப் படத்தில் நடித்ததன்மூலம் சிறந்த அறிமுக கதாநாயகன் விஜய் விருதையும் பெற்றார். இந்தப் படத்துக்கு பிறகு ஓராண்டு இடைவெளிவிட்டு உதயம் படத்தில் நடித்தார்.
அடுத்து மௌன குரு, தகராறு, ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் படத்தில் நடித்தார். 2015ஆம் ஆண்டு திரில்லர் மூவியான டிமான்ட் காலனி படத்தில் மிரட்டினார்.
![Arulnithi Birthday special 2021](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/e6v7u-wveaofr3q_2107newsroom_1626835763_588.jpg)
பின்னர் நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும், ஆறாது சினம், பிருந்தாவனம், இரவுக்கு ஆயிரம் கண்கள், கே-13, களத்தில் சந்திப்போம் என கதைகளை நிதானமாக தேர்ந்தெடுத்து நடித்தார்.
தற்போது இவரின் நடிப்பில் டைரி என்ற படம் உருவாகிவருகிறது. அண்மையில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத வம்சம் அருள் நிதிக்கு இனிய 34ஆவது பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
இதையும் படிங்க : ஹேப்பி பர்த்டே சின்ன தளபதி பரத்!