பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியாகி சாதியத்தின் கோர முகத்தைப் பட்டவர்த்தனமாகக் கிழித்தெறிந்த படம் 'ஆர்டிக்கிள் 15'. இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக்கை அருண்ராஜா காமராஜ் உதயநிதி ஸ்டாலினை வைத்து இயக்கிவருகிறார். இந்தப் படத்தை ரோமியா பிக்சர்ஸ் சார்பில் ராகுல் தயாரிக்கிறார். போனி கபூரின் பே வியூ புரோஜக்ட் எல்எல்பி, ஜீ ஸ்டுடியோ நிறுவனங்கள் படத்தை இணைந்து வழங்குகின்றன.
பொள்ளாச்சிப் பகுதியில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. பெயரிடப்படாமல் இருந்த இப்படத்திற்குப் படக்குழு தற்போது 'நெஞ்சுக்கு நீதி' தலைப்பு வைத்துள்ளது.
இப்படத்தில் காவல் துறை அலுவலராக நடிக்கும் உதயநிதியுடன் கதாநாயகியாக நடிகை தான்யா ரவிச்சந்திரன் நடிக்கின்றார். இவர்களுடன் ஆரி அர்ஜுனன், ஷிவானி ராஜசேகர், மேலும் மயில் சாமி, சுரேஷ் சக்ரவர்த்தி, இளவரசு, ‘ராட்சசன்’ சரவணன் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
-
Make way for the motion poster of #NenjukuNeedhi! #NenjukuNeedhiMotionPoster@ZeeStudios_ @BayViewProjOffl Presentation of @BoneyKapoor Production in association with #RomeoPictures @mynameisraahul
— Boney Kapoor (@BoneyKapoor) October 16, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
@Udhaystalin @Arunrajakamaraj @actortanya https://t.co/yrQsNMplyd
">Make way for the motion poster of #NenjukuNeedhi! #NenjukuNeedhiMotionPoster@ZeeStudios_ @BayViewProjOffl Presentation of @BoneyKapoor Production in association with #RomeoPictures @mynameisraahul
— Boney Kapoor (@BoneyKapoor) October 16, 2021
@Udhaystalin @Arunrajakamaraj @actortanya https://t.co/yrQsNMplydMake way for the motion poster of #NenjukuNeedhi! #NenjukuNeedhiMotionPoster@ZeeStudios_ @BayViewProjOffl Presentation of @BoneyKapoor Production in association with #RomeoPictures @mynameisraahul
— Boney Kapoor (@BoneyKapoor) October 16, 2021
@Udhaystalin @Arunrajakamaraj @actortanya https://t.co/yrQsNMplyd
'நெஞ்சுக்கு நீதி' படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. போஸ்டரில் சின்ன சின்ன காட்சிகளுடன் 'ஜாதி ஜாதி ஜாதி' என்ற பாடலும் இடம்பெற்றுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி 'நெஞ்சுக்கு நீதி' என்னும் சுயசரிதை புத்தகத்தை எழுதியிருந்தார். தற்போது அதன் தலைப்பையே உதயநிதி படத்திற்குத் தலைப்பாக வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'கடைசியா ஒரு தடவ..' - மனைவியைத் தொடக் கூட முடியாமல் கதறி அழுத அருண்ராஜா