ETV Bharat / sitara

நடிகர் அர்ஜுனின் மருமகன் மாரடைப்பால் மரணம்! - Arjun Sarja's Nephew Chiranjeevi Sarja passes away

பெங்களூரு: பிரபல தமிழ் நடிகர் அர்ஜுனின் மருமகன் சிரஞ்சீவி சர்ஜா மாரடைப்பு காரணமாக இன்று உயிரிழந்தார்.

Chiranjeevi Sarja with arjun sarja
Chiranjeevi Sarja with arjun sarja
author img

By

Published : Jun 7, 2020, 5:03 PM IST

Updated : Jun 7, 2020, 6:27 PM IST

தமிழ் திரையுலகின் ஆக்‌ஷன் கிங் அர்ஜுனின் மருமகனும், சான்டல்வுட்டின் (கன்னடம்) பிரபல நடிகருமான சிரஞ்சீவி சர்ஜா மாரடைப்பு காரணமாக பெங்களூருவில் இன்று மரணமடைந்தார். இவருக்கு வயது 39.

பெங்களூருவில் பிறந்த இவர், கல்லூரி படிப்பை முடித்துவிட்டு தனது மாமாவான அர்ஜுனிடம் நான்கு வருடங்கள் உதவி இயக்குநராகப் பணியாற்றிவந்தார். 2009ஆம் ஆண்டு கன்னட மொழியில் தயாரான வாயுபுத்ரா என்ற படம் மூலம் அறிமுகமான இவர், அந்தப் படத்துக்காக சிறந்த அறிமுக நடிகர் விருதையும் பெற்றார்.

சிரஞ்சீவி சர்ஜாவின் உடல்
சிரஞ்சீவி சர்ஜாவின் உடல்

அதன்பின், சில படங்களில் சிறப்புத் தோற்றமாகத் தலைகாட்டிய இவர், இந்தாண்டில் மட்டும் நான்கு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார்.

அதில் ராஜமார்த்தாண்டா படத்தின் படப்பிடிப்பு மட்டும் முடிவடைந்துள்ள நிலையில், கரோனா காரணமாக எஞ்சிய மூன்று படங்களின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை. இச்சூழலில்தான் சிரஞ்சீவி சர்ஜா இன்று உயிரிழந்துள்ளார்.

மனைவி மேகனா ராஜுடன் சிரஞ்சீவி சார்ஜா
மனைவி மேகனா ராஜுடன் சிரஞ்சீவி சர்ஜா

உயர்திரு 420, காதல் சொல்ல வந்தேன் உள்ளிட்ட சில தமிழ்ப் படங்களில் நடித்த மேகனா ராஜ் என்பவரை 2018ஆம் ஆண்டு இவர் மணமுடித்தது குறிப்பிடத்தக்கது.

Last Updated : Jun 7, 2020, 6:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.