ETV Bharat / sitara

அர்ஜுன் ரெட்டியின் இந்தி ரீமேக்கான 'கபீர் சிங்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு - கபீர் சிங்

தெலுங்கில் மாஸ் ஹிட் அடித்த அர்ஜுன் ரெட்டியின் இந்தி ரீமேக்கான கபீர் சிங் திரைப்படம் வரும் ஜூன் 21ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

கபீர் சிங் போஸ்டர்
author img

By

Published : Apr 21, 2019, 9:00 PM IST

தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் அர்ஜுன் ரெட்டி. சந்தீப் வங்கா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா - ஷாலினி பாண்டே ஜோடி சிறந்த நடிப்பைக் கொடுத்திருந்தனர். படமும் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. விஜய் தேவரகொண்டாவை தெலுங்கில் முன்னணி ஹீரோவாகவும் ஆக்கியது அர்ஜுன் ரெட்டி.

இந்தப் படத்தை தமிழில் பாலா இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ் நடிப்பில் வர்மா என்று தலைப்பிட்டு ஷூட்டிங் தொடங்கினர். அனைத்துப் பணிகளும் முடிவடைந்து படத்தைப் பார்த்த தயாரிப்புக் குழுவுக்கு திருப்தியைக் கொடுக்கவில்லை. அதனால் படம் கைவிடப்பட்டது. தற்போது ஆதித்யா வர்மா என்று தலைப்பிட்டு, வேறு ஒரு இயக்குநர் இயக்கத்தில் படம் எடுக்கப்பட்டு வருகிறது.

arjun reddy movie's hindi remake kabirsingh release date
கபீர் சிங் போஸ்டர்
அதே நேரத்தில், 'அர்ஜுன் ரெட்டி' படம் இந்தியில் கபீர் சிங் என்னும் தலைப்பில் தயாரிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் இந்தியில் இளம் முன்னணி ஹீரோவான சாகித் கபூர் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி, ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.
தெலுங்கு பதிப்பைப் போல இந்தி ரீமேக்கின் டீசர் இருந்ததாக ரசிகர்கள் பாராட்டினர். சாகித் கபூரின் கெட்டப்பும், அலட்டிக்காத நடிப்பும் அர்ஜுன் ரெட்டி விஜய் தேவரகொண்டாவை நினைவுபடுத்துவதாக ரசிகர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் இப்படம் குறித்த முக்கிய அப்டேட்டினை படக்குழு வெளியிட்டுள்ளது. அதாவது, கபீர் சிங் திரைப்படம் வரும் ஜுன் 21ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.