ETV Bharat / sitara

'அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா' படம் ரிலீஸ்? - அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா ட்ரெய்லர்

'அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா' படத்தின் ட்ரெய்லர் வெளியாகி 6 மாதங்களுக்கு மேல் ஆகியும் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது வெளியீட்டுத் தேதியை முடிவு செய்து படக்குழுவினர்கள் அறிவித்துள்ளனர்.

'அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா' படத்தில் நடிகர்கள் பசுபதி, ரோபோ சங்கர், வீரா
author img

By

Published : Oct 17, 2019, 10:58 PM IST

சென்னை: அரசியல் களத்தை மையமாக வைத்து காமெடி படமாக உருவாகியிருக்கும் 'அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா' படம் டிசம்பர் மாதத்தில் வெளியாகவுள்ளது.

ராஜதந்திரம் படப்புகழ் வீரா கதாநாயகனாகவும், குக்கூ படத்தில் நடித்த மாளவிகா நாயர் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். நடிகர்கள் பசுபதி, ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பொதுவாக அரசியல் களத்தில் உருவாகும் படங்களில் சமகால அரசியல் நிகழ்வுகளை மையப்படுத்திய காட்சிகளோடு படம் அமைந்திருக்கும். அந்த வகையில் இந்தப் படத்திலும் தற்போதைய அரசியல் நிலவரத்தை நய்யாண்டி செய்யும் விதமான காட்சிகளுடன் படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டிருந்தனர்.

இதன் பின்னர் படத்தின் ரிலீஸ் குறித்து எந்த வித அறிவிப்பும் வெளியாகமல் இருந்த நிலையில், தற்போது படத் தயாரிப்பாளர்கள் வெளியீட்டுத் தேதியை முடிவுசெய்து அறிவித்துள்ளனர். அதன்படி படம் வரும் டிசம்பர் 27ஆம் தேதி வெளியாகவுள்ளது.

ஆரோ சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தை அவினாஷ் ஹரிஹரன் இயக்கியுள்ளார். சூரியன் படத்தில் கவுண்டமணி பேசும் பிரபல வசனமான ’அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா’ என்ற டைட்டிலை கொண்டு உருவாகியிருக்கும் இப்படம் 2019ஆம் கடைசி வெள்ளிக்கிழமை வெளியாகவிருக்கிறது.

Intro:Body:

பொலிட்டிகல் காமெடி படமான அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா பட ரிலீஸ் தேதி அறிவிப்பு 

ட்ரெய்லர் வெளியாகி 6 மாதங்களுக்கு மேல் ஆகியும் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது வெளியீட்டு தேதியை முடிவு செய்து படக்குழுவினர்கள் அறிவித்துள்ளனர். 

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.