குடும்பங்கள் சிரித்துக் கொண்டாடும் ஜனரஞ்சகமானப் படங்களை இயக்குவதில் வல்லவரான சுந்தர்.சி இயக்கிய அரண்மனை, அரண்மனை 2 ஆகிய படங்கள் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது.
இந்த இரு படங்களும் திகில், நகைச்சுவை கலந்து அனைத்துத் தரப்பினரும் பார்த்து ரசிக்கும் படமாக அமைந்திருந்தது.
இந்த இரு படங்களின் வெற்றிக்குப் பிறகு தற்போது சுந்தர்.சி, அரண்மனை மூன்றாம் பாகத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ஆர்யா, ராஷி கண்ணா, சுந்தர்.சி முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் காமெடியனாக நடித்துள்ளார்.
அரண்மனை 3-யில் நடித்தவர்கள் இவர்கள் தானா?
ஆண்ட்ரியா, யோகி பாபு, மனோ பாலா, சம்பத், சாக்ஷி அகர்வால், மதுசூதன ராவ், வின்சென்ட் அசோகன், வேல ராமமூர்த்தி, நளினி, விச்சு விஸ்வநாத் உள்ளிட்டப் பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
'அரண்மனை 3' என்ற தலைப்பில் வெளியாக இருக்கும் இந்தப் படம் முந்தைய இரண்டு பாகங்களைவிட மிகப் பிரமாண்டமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் சார்பில், நடிகை குஷ்பூ தயாரித்துள்ள இப்படத்திற்கு சி.சத்யா இசையமைத்துள்ளார்.
-
The devil's here! 😈https://t.co/kBeIcmYLlB
— ZEE5 Tamil (@ZEE5Tamil) November 2, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Watch the horror comedy #Aranmanai3 from 12th November on #ZEE5 @arya_offl @RaashiiKhanna_ @iYogiBabu @khushsundar @ssakshiagarwal @CSathyaOfficial pic.twitter.com/NryDQePOXt
">The devil's here! 😈https://t.co/kBeIcmYLlB
— ZEE5 Tamil (@ZEE5Tamil) November 2, 2021
Watch the horror comedy #Aranmanai3 from 12th November on #ZEE5 @arya_offl @RaashiiKhanna_ @iYogiBabu @khushsundar @ssakshiagarwal @CSathyaOfficial pic.twitter.com/NryDQePOXtThe devil's here! 😈https://t.co/kBeIcmYLlB
— ZEE5 Tamil (@ZEE5Tamil) November 2, 2021
Watch the horror comedy #Aranmanai3 from 12th November on #ZEE5 @arya_offl @RaashiiKhanna_ @iYogiBabu @khushsundar @ssakshiagarwal @CSathyaOfficial pic.twitter.com/NryDQePOXt
அக்டோபர் 14ஆம் தேதி வெளியான 'அரண்மனை 3' ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனையடுத்து பிரபல ஓடிடி தளமான ஜீ5-இல் அரண்மனை 3 நவம்பர் 12ஆம் தேதி வெளியாகிறது.
இதையும் படிங்க: அரண்மனை 3 ரிலீஸ்.... எதிர்பார்ப்பில் ரசிகர்கள்