இசை உலகின் ஆஸ்கர் விருதாக கருதப்படும் கிராமி விருதுகள் அமெரிக்காவிலுள்ள ரெக்கார்டிங் அகாதமியால் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு 62ஆவது கிராமி விருதுகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.
அமெரிக்கா மட்டுமில்லாமல் உலகம் முழுவதிலுமிருந்து பல்வேறு இசைக் கலைஞர்கள் இந்த விருது நிகழ்ச்சியில் பங்கேற்கும் நிலையில், சிறந்த பாடல் தொடங்கி சிறந்த இசைப் படம் வரை பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன.
இதில் இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் தனது மகன் அமீனுடன் கலந்துகொண்டார். அப்போது அங்கு பாடகர் பி.ஜே மோர்டனுடன் ஏ.ஆர் ரகுமான், அமீன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தனது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
NBA ஜாம்பவான் கோப் பிரைன்ட் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த ரகுமான், கோப் பிரைன்ட்க்கு நடைபெற்ற இறுதிச் சடங்குகள் குறித்தும் பதிவிட்டார். கிராமி விருதானது அமெரிக்காவில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி இந்தியாவில் இன்று காலை தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யபட்டது.
இதையும் வாசிங்க: ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த கூடைப்பந்தாட்ட ஜாம்பவான் - இரங்கல் தெரிவித்த பிரபலங்கள்!