ETV Bharat / sitara

ஏ.ஆர்.ரஹ்மான் தாயார் உடல் நல்லடக்கம் - ஏ.ஆர். ரஹ்மான் தாயார் கரீமே பேகம்

வயது மூப்பின் காரணமாக உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தாயார் கரீமா பேகம் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

AR Rahman mother karima begum
ஏ.ஆர். ரஹ்மான் தாயார் கரீமா பேகம்
author img

By

Published : Dec 28, 2020, 9:04 PM IST

சென்னை: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் தாயார் கரீமா பேகம் உடல் கும்மிடிப்பூண்டியில் வைத்து நல்லடக்கம் செய்யப்பட்டது.

கரீமா பேகம் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் சரியில்லாமல் இருந்துள்ளார். அதற்காக அவர் சிகிச்சை எடுத்து வந்த நிலையில், வயது மூப்பின் காரணமாக அண்மையில் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இதையடுத்து சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து கரீமா பேகம், இன்று (டிச.28) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

கரீமா பேகத்தின் உடல் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகேயுள்ள ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சொந்தமான இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதையும் படிங்க: இன்னும் பிரசாத் ஸ்டுடியோ செல்லாத இளையராஜா...காரணம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.