ETV Bharat / sitara

ஏ.ஆர். முருகதாஸ் வெளியிட்ட ’எண்ணித்துணிக’ ஃபர்ஸ்ட் லுக் - AR Murugadoss unveiled Ennithuniga 1st look

ஜெய் நடிப்பில் உருவாகியுள்ள ‘எண்ணித்துணிக’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் வெளியிட்டுள்ளார்.

AR Murugadoss unveiled Ennithuniga 1st look

author img

By

Published : Feb 22, 2021, 7:30 PM IST

அறிமுக இயக்குநர் வெற்றிச்செல்வன் இயக்கத்தில் ஜெய், அதுல்யா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் ‘எண்ணித்துணிக’. ரெயின் ஆஃப் ஆரோஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இதற்கு சாம் சிஎஸ் இசையமைக்கிறார், எடிட்டிங் பணிகளை சாபு ஜோசப் மேற்கொள்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜெய் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வெளியாகவுள்ள படம் என்பதால், இதற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கோடை விடுமுறையில் இப்படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.