ETV Bharat / sitara

இறைச்சியில் வெடி மருந்து வைத்து நரி கொல்லப்பட்ட சம்பவம் : சீறும் அனுஷ்கா ஷர்மா

திருச்சியில் உணவில் வெடி மருந்து வைத்து நரி ஒன்று கொல்லப்பட்ட சம்பவம் குறித்த நடிகை அனுஷ்கா ஷர்மா தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி பதிவிட்டுள்ளார்.

anushka slams  TN for jackal killed with explosives

author img

By

Published : Jun 10, 2020, 11:23 AM IST

கேரள மாநிலத்தில் கருவுற்ற யானை, வெடி மறைத்து வைக்கப்பட்ட அன்னாசி பழத்தை உண்டு உயிரிழந்த சம்பவம் நாடெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, திருச்சி மாவட்டத்தில் வெடிமருந்து கலந்த இறைச்சியை கொடுத்து நரி ஒன்றைக் கொலை செய்த 12 பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட செய்தி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

anushka slams  TN for jackal killed with explosives
அனுஷ்கா ஷர்மாவின் இன்ஸ்டாகிராம் பதிவு

இது போன்று தொடர்ந்து நடைபெற்று வரும் விலங்குகளைக் கொல்லும் சம்பவங்களுக்கு எதிராக பலரும் குரல் கொடுத்துவரும் நிலையில், பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவும் தனது எதிர்ப்புக் குரலை பதிவு செய்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், ”எந்த மாதிரியான போக்கை நாம் பின்பற்றி வருகிறோம்? இது போன்ற சம்பவங்கள் பெரும் அச்சுறுத்தலாக உள்ளன. விலங்குகளுக்கு எதிரான கொடுமைகளுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் கொண்டுவர வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : திறமைகளுக்காக அங்கீகாரம் பெறுவது முக்கியமானது - அனுஷ்கா ஷர்மா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.