இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் வெளியான 'பாகுபலி' படத்தில் 'தேவசேனா' கதாபாத்திரத்தில் நடித்து இந்தியா முழுவதும் பிரபலமானவர் நடிகை அனுஷ்கா ஷெட்டி. சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான 'பாகமதி' படத்திற்குப் பின் திரையுலகிலிருந்து விலகியிருந்தார்.
தற்போது அனுஷ்கா, ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் ‘நிசப்தம்’ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். த்ரில்லர் பாணியில் உருவாகிவரும் இந்தப் படத்தில் அனுஷ்கா, நடிகர் மாதவனுடன் ஜோடி சேர்ந்துள்ளார். இவர்களுடன் அஞ்சலி, ஷாலினி பாண்டே, சுப்பராஜு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இப்படத்தை பீப்புள் மீடியா ஃபேக்ட்ரி - கோனா ஃபிலிம்ஸ் கார்ப்பரேசன் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.
சமீபத்தில் வெளியான ஃபர்ஸ்ட் லுக்கில் கைகளில் வர்ணம் படிந்தபடியும் செகண்ட் லுக்கில் கையில் பிரஷ் வைத்து ஓவியம் வரைவது போலவும் இருந்தது.
இந்நிலையில் தற்போது அனுஷ்காவின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் அனுஷ்காக ஓவியராக உள்ளார். இப்படத்தில் அனுஷ்காவின் கதாபாத்திரத்திற்கு சாக்ஷி என்று பெயர் வைத்துள்ளனர். இதில் அனுஷ்காவின் ஓவியம் பேசும் ஆனால் அவரால் பேசமுடியாது என்று தெரிவித்துள்ளனர்.
இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.
அனுஷ்கா இதுவரை எத்தனையோ மாறுபட்ட வேடங்களில் நடித்திருந்தபோதும் இந்த ‘நிசப்தம்’ படத்தில் அவர் நடிக்கும் கதாபாத்திரம் ரசிகர்களுக்குப் பெரிய ஆச்சரியத்தைக் கொடுக்கும் வகையில் இருக்கும் என்று படக்குழு அறிவித்திருந்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு அனுஷ்கா சினிமாவில் வருவதால் ரசிகர்கள் இப்படத்தை ஆர்வத்துடன் எதிர்பார்த்திருக்கின்றனர்.