ETV Bharat / sitara

'நிசப்தம்' படத்தில் அஞ்சலிக்கு இந்த வேடமா...? இனி யாரும் தப்ப முடியாது!

author img

By

Published : Nov 1, 2019, 1:10 PM IST

அனுஷ்கா நடிப்பில் உருவாகிவரும் 'நிசப்தம்' படத்தில் அஞ்சலி கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

nishabdham

இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் வெளியான 'பாகுபலி' படத்தில் 'தேவசேனா' கதாபாத்திரத்தில் நடித்து, இந்தியா முழுவதும் பிரபலமானவர் நடிகை அனுஷ்கா ஷெட்டி. சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான 'பாகமதி' படத்திற்குப் பின் சிறிது காலம் திரையுலகிலிருந்து விலகியிருந்தார்.

தற்போது, ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் ‘நிசப்தம்’ எனும் திரைப்படத்தில் அனுஷ்கா நடித்துவருகிறார். த்ரில்லர் பாணியில் உருவாகிவரும் இந்தப் படத்தில் அனுஷ்கா, நடிகர் மாதவனுக்கு ஜோடி சேர்ந்துள்ளார். இவர்களுடன் அஞ்சலி, ஷாலினி பாண்டே, சுப்பராஜு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இப்படத்தை பீப்புள் மீடியா ஃபேக்ட்ரி - கோனா ஃபிலிம்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஓவியர் சாக்ஷி கதாபாத்திரத்தில் அனுஷ்காவும், மாதவன் ஆண்டனி என்னும் பிரபல இசைக்கலைஞர், முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். இப்படத்தின் டீஸரை நவம்பர் 7ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவுசெய்துள்ளது.

தற்போது இப்படத்தின் மற்றொரு நாயகி அஞ்சலிக்கான கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தில் மகா என்னும் க்ரைம் டிடெக்டிவ் கதாபாத்திரத்தில் அஞ்சலி நடிக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.

Intro:Body:

silence movie anjali first look poster

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.