விஷ்வ பிரசாத் தயாரிப்பில், ஹேமந்த் மதுகர் இயக்கத்தில், உருவாகியுள்ள படம் 'நிசப்தம்'. மாதவன், அனுஷ்கா ஷெட்டி, அஞ்சலி ஆகியோர் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
பேச்சு மற்றும் செவித்திறன் குறைபாடுள்ள கலைஞரின் கணவர் விசித்திரமான முறையில் காணாமல் போகும் சம்பவத்தை அடிப்படையாக வைத்து சஸ்பென்ஸ் கலந்த த்ரில்லர் பாணியில் இப்படம் உருவாகியுள்ளது.
இதற்கிடையில் இத்திரைப்படம் வரும் அக்டோபர் 2ஆம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகவுள்ளதாக அறிவிப்பு வெளியான நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி 'நிசப்தம்' திரைப்படத்தின் டிரெய்லர் வரும் 21ஆம் தேதி பிற்பகல் 1 மணிக்கு வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து படக்குழுவினர் கூறுகையில், "நிசப்தம் படம் தெலுங்கிற்கு மட்டுமே தலைப்பாக உள்ளது. மற்ற மொழிகளான தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் 'சைலன்ஸ்' என்று தலைப்பிடப்பட்டுள்ளது. முன்பு இந்தப் படத்தின் பணிகள் தொடங்கப்பட்ட போது படத்தில் வசனங்கள் இடம்பெறாது என்று அறிவித்து இருந்தோம். ஆனால் தற்போது இந்தப் படத்தில் வசனங்களும் இடம்பெற்றுள்ளது.
அதேபோன்று தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய 3 மொழிகளில் இப்படம் வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில், தற்போது கன்னடத்திலும் வெளியாகவுள்ளது" என்று கூறினர்.