ETV Bharat / sitara

'நாம் எடுத்து வைக்கும் சிறிய அடி, பெரிய மாற்றத்தைக் கொண்டுவரும்’ - அனுஷ்கா - அனுஷ்கா ஷெட்டி படங்கள்

”நம்மால் எல்லாவற்றையும் மாற்ற முடியாது. சரி செய்யவும் முடியாது. ஆனால் நாம் எடுத்து வைக்கும் சிறிய அடி, பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும்” என நடிகை அனுஷ்கா பதிவிட்டுள்ளார்.

அனுஷ்கா
அனுஷ்கா
author img

By

Published : Jun 17, 2020, 2:02 PM IST

நடிகை அனுஷ்கா மனநல ஆரோக்கியத்தின் அவசியத்தை வலியுறுத்தி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங், கடந்த சில தினங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். மன அழுத்தத்தின் காரணமாகதான் அவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகின. அவரது மரணம் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி, பேசுபொருளானது.

இதனையடுத்து திரைப் பிரபலங்கள் பலர் மனநல ஆரோக்கியத்தின் அவசியத்தை வலியுறுத்தி, தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகை அனுஷ்கா தனது பேஸ்புக் பக்கத்தில் மன நல ஆரோக்கியம் குறித்து பதிவிட்டுள்ளார்.

அதில், "எல்லோரும் இங்கே நிறைவானவர்கள் இல்லை. சூழ்நிலைக்கு ஏற்ப அனைவரும் முடிவுகள் எடுக்கின்றனர். இதுதான் சரி, இதுதான் தவறு என்பது இல்லை. வாழ்க்கையை நடத்த நாம் பிறக்கும்போதே வரைபடத்துடன் பிறக்கவில்லை.

சிலர் உதவி கேட்பார்கள். சிலர் உள்ளுக்குள் உடைந்து போவார்கள். சிலர் அழுது விடுவார்கள். சிலர் அமைதியாக இருப்பார்கள். சிலருக்கு உதவிகள் கிடைப்பதில்லை. சிலர் அவரவர் வழியை அனுபவப்பூர்வமாக உணர்ந்து செயல்படுவார்கள். நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் உதவி செய்யவும் கனிவுடன் இருக்கவும் கற்றுக் கொள்வோம்.

அனுஷ்காவின் ஃபேஸ்புக் பதிவு
அனுஷ்காவின் ஃபேஸ்புக் பதிவு
விட்டுக் கொடுக்கவும் மற்றவர்களிடம் அன்பு காட்டவும் கற்றுக் கொள்வோம். மற்றவர்கள் நம்முடன் பேசுவதை கூர்ந்து கவனிக்க கற்றுக் கொள்வோம். பிறருடன் வலுவாக உரையாடவும் கற்றுக் கொள்வோம். உள்ளே எப்படி உணர்கிறோமோ, அதை மற்றவர்களுக்கு சொல்லலாம். நாம் மனிதர்கள். நமது சிரிப்பு, அதனைக் கேட்கும் காதுகள், ஒருவரது மென்மையான தொடுகை போன்றவை வாழ்க்கையில் நல்ல மாற்றத்தைக் கொண்டு வரும். நம்மால் எல்லாவற்றையும் மாற்ற முடியாது. சரிசெய்யவும் முடியாது. ஆனால், ஒரு சிறிய அடி எடுத்து வைத்தாலும் பெரிய மாற்றம் வரும்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : இனி எந்தக் கனவுகளையும் சாகடிக்க விடக்கூடாது - பிரகாஷ் ராஜ் உருக்கம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.