ETV Bharat / sitara

எஸ்.பி.ஜனநாதன் வீட்டில் மற்றுமொரு துயரம் - தங்கை காலமானார்! - இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் தங்கை மரணம்

சென்னை: இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் இறந்த இரண்டு நாட்களே ஆன நிலையில் அவரது தங்கையும் மரணமடைந்துள்ளார்.

SP Jananathan
SP Jananathan
author img

By

Published : Mar 17, 2021, 5:28 PM IST

தேசியவிருது வென்ற இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன்(61) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில், மார்ச் 14ஆம் தேதி உயிரிழந்தார். இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் 'இயற்கை', 'ஈ', 'பேராண்மை', 'புறம்போக்கு' உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். தற்போது இவர் விஜய்சேதுபதியை வைத்து 'லாபம்' படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், இறுதி கட்டப்பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.

எஸ்.பி.ஜனநாதனின் மறைவுக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர். விஜய் சேதுபதி அவரது மருத்துவ செலவை முழுவதும் ஏற்றுக்கொண்டது மட்டுமின்றி இறுதிச்சடங்குவரை கூடவே இருந்தார்.

இந்நிலையில், எஸ்.பி. ஜனநாதன் மரணமடைந்து இரண்டு நாட்களே ஆன நிலையில், சோகம் தாங்கமால் அவரது தங்கை லட்சுமி மாரடைப்பு காரணாக உயிரிழந்தார். அடுத்தடுத்து இரண்டு மரணங்கள் அவரது குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: இயக்குநர் எஸ்பி ஜனநாதன் காலமானார்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.