சிறுத்தை சிவா இயக்கத்தில் முதல்முறையாக ரஜினிகாந்த் நடித்துவரும் திரைப்படம் 'அண்ணாத்த'. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.
'அண்ணாத்த' படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க, முறை பெண்ணாக குஷ்பூ நடித்துள்ளாராம். அதேபோல் சகோதரியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும் சூரி, பிரகாஷ் ராஜ், ஜகபதி பாபு, சதீஷ் உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் ரஜினிகாந்த் தனது காட்சிகள், டப்பிங் என அனைத்து பணிகளையுடம் முடித்துவிட்டார்.
ஒருபக்கம் படப்பிடிப்பு நடைபெற, மறுபக்கம் மற்ற நடிகர்கள் டப்பிங் பணியில் பிஸியாக உள்ளனர். இந்நிலையில் 'அண்ணாத்த' படத்தின் படப்பிடிப்பு லக்னோவில் நடைபெற்று வருகிறது.
அண்ணாத்த டப்பிங்கை முடித்த ரஜினி!
இதனை முடித்துவிட்டு இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக வரும் 21ஆம் தேதி படக்குழுவினர் கொல்கத்தா செல்ல உள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.
கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்த இப்படம், கரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டது. வரும் தீபாவளியன்று 'அண்ணாத்த' படம் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். நீண்ட நாள்களுக்கு பிறகு ரஜினியை திரையில் காண ஆர்வமாக இருப்பதாக அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ரெஜினாவின் 'சூர்ப்பனகை' படப்பிடிப்பு நிறைவு!