ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வெளியாகவுள்ள திரைப்படம் 'தர்பார்'. இதில் பிரதிக் பாப்பர், சுனில் ஷெட்டி, தம்பி ராமையா, யோகி பாபு, நிவேதா தாமஸ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைப்புப் பணிகளை கவனித்து வருகிறார்.
2020 பொங்கல் பண்டிகையையொட்டி இத்திரைப்படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இதன் மோஷன் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன்பிறகு ரஜினி டப்பிங் செய்யும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. நேற்று படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் வெளியானது.
எஸ்பிபி குரலில் வெளியான இப்பாடல் வெளியான சில நிமிடங்களிலேயே இணையத்தை கலக்கியது. பாடல் வெளியான 48 மணி நேரத்திற்குள் சுமார் 6 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.
-
Idhu Anbu saamraajyam🤘🏻Ini Thalaivarin @rajinikanth #Darbar aarambam ⭐ Mikka nandri for #ChummaKizhi chifying the views :) https://t.co/hur7ch2oFW
— Anirudh Ravichander (@anirudhofficial) November 28, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
6 Million & counting 🥳@ARMurugadoss #SPB sir @Lyricist_Vivek @santoshsivan #Nayanthara @LycaProductions pic.twitter.com/wdYiKCOqRP
">Idhu Anbu saamraajyam🤘🏻Ini Thalaivarin @rajinikanth #Darbar aarambam ⭐ Mikka nandri for #ChummaKizhi chifying the views :) https://t.co/hur7ch2oFW
— Anirudh Ravichander (@anirudhofficial) November 28, 2019
6 Million & counting 🥳@ARMurugadoss #SPB sir @Lyricist_Vivek @santoshsivan #Nayanthara @LycaProductions pic.twitter.com/wdYiKCOqRPIdhu Anbu saamraajyam🤘🏻Ini Thalaivarin @rajinikanth #Darbar aarambam ⭐ Mikka nandri for #ChummaKizhi chifying the views :) https://t.co/hur7ch2oFW
— Anirudh Ravichander (@anirudhofficial) November 28, 2019
6 Million & counting 🥳@ARMurugadoss #SPB sir @Lyricist_Vivek @santoshsivan #Nayanthara @LycaProductions pic.twitter.com/wdYiKCOqRP
இதுகுறித்து படத்தின் இசையமைப்பாளர் அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில், 'இது அன்பு சாம்ராஜ்ஜியம்...இனி தலைவரின் தர்பார் ஆரம்பம்...மிக்க நன்றி சும்மா கிழிchifying' என ட்வீட் செய்துள்ளார்.
இதையும் படிங்க:
அஜித்துக்கும் வலை விரிக்கிறதா பாஜக? - புகழ்ந்து தள்ளும் எஸ்.வி.சேகர்