சென்னை : விகாஷ் என்பவர் சொமெட்டோ மூலம் உணவகத்தில் காம்போவாக உணவு ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அவருக்கு முழுமையாக உணவு டெலிவரி ஆகாததால் சொமெட்டோ கேர் எனப்படும் வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகி புகார் தெரிவித்துள்ளார்.
அப்போது, சொமெட்டோ தரப்பில், "உங்கள் புகார் குறித்து உணவகத்தைத் தொடர்புகொண்டோம், ஆனால் மொழி தெரியாததால் உங்களது பிரச்சினையைத் தீர்க்க முடியவில்லை எனக் கூறியும் இந்தி நமது தேசிய மொழி. அதனால், ஒவ்வொருவருக்கும் ஓரளவாவது கண்டிப்பாக இந்தி தெரிந்திருக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளது.
இந்த உரையாடல் பதிவை ட்விட்டரில் விகாஷ் பதிவிட சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி சொமெட்டோ நிறுவனத்திற்குப் பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் எழுந்தன. பின்னர் சொமெட்டோ நிறுவன அலுவலர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தமிழிலும், ஆங்கிலத்திலும் மன்னிப்பு கேட்டிருந்தார்.
இந்நிலையில், சொமேட்டோ நிறுவனத்தின் விளம்பரத் தூதர் ஒப்பந்தத்திலிருந்து அனிருத் விலகவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.
இதையும் படிங்க : 'தமிழர்களின் மரபு சுயமரியாதையே' - சொமெட்டோ வாடிக்கையாளர் விகாஷின் மாஸ் ட்வீட்