ETV Bharat / sitara

பிரசாந்த் நடிக்க 'அந்தாதூன்' தமிழ் ரீமேக் படப்பிடிப்பு தொடக்கம் - நடிகர் பிரசாந்த்

பாலிவுட் சூப்பர் ஹிட் படமான 'அந்தாதூன்' படத்தை ஜே.ஜே.பெட்ரிக் இயக்குவதாக இருந்த நிலையில், தற்போது படத்தின் தயாரிப்பாளரான தியாகராஜன் இயக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பும் தொடங்கியுள்ளது.

Andhadhun tamil remake shooting begins
அந்தகன் படப்பிடி்பபு தொடக்கம்
author img

By

Published : Mar 10, 2021, 4:07 PM IST

சென்னை: பாலிவுட்டில் சூப்பர்ஹிட்டான 'அந்தாதூன்' ரீமேக்காக தமிழில் உருவாகும் 'அந்தகன்' படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று (மார்ச் 10) தொடங்கியது.

இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை நடிகரும், தயாரிப்பாளருமான தியாகராஜன் கைப்பற்றினார். இதையடுத்து ரீமேக்கில் தனது மகன் பிரசாந்த்தை கதாநாயகனாக நடிக்க வைத்து எடுக்கிறார்.

படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது. முன்னதாக 'பொன்மகள் வந்தாள்' படத்தின் இயக்குநர் ஜே.ஜே.பெட்ரிக் இந்தப் படத்தை இயக்குவதாக இருந்தது.

Andhadhun tamil remake shooting begins
'அந்தாதூன்' தமிழ் ரீமேக் அந்தகன் படப்பிடிப்பு தொடக்கம்

ஆனால், தற்போது தியாகராஜனே படத்தை இயக்குகிறார். ஸ்டார் மூவிஸ் தயாரிக்கும் இப்படத்தில் சிம்ரன், கார்த்திக், யோகிபாபு, ஊர்வசி, கேஎஸ்.ரவிக்குமார், மனோபாலா, வனிதா விஜயகுமார் உள்ளிட்டோர் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். படத்துக்கு ஒளிப்பதிவு - ரவியாதவ்.

Andhadhun tamil remake shooting begins
நடிகர் பிரசாந்த் தந்தை தியாகராஜனுடன்...

பாலிவுட்டில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியாகி பம்பர் ஹிட் அடித்த திரைப்படம் அந்தாதூன். ஶ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்தப் படம் பல்வேறு பிரிவுகளில் தேசிய விருதையும் பெற்றது.

இந்தப் படமானது மலையாளத்தில் உருவாகி வரும் நிலையில், தற்போது தமிழிலும் தயாராகுகிறது.

இதையும் படிங்க: அசோக் செல்வன், பிரியா பவானி சங்கர் நடிக்கும் படத்தின் டைட்டில் வெளியீடு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.