சென்னை: நாய்க்கு நடிகர் சூரி டப்பிங் கொடுத்துள்ள ‘அன்புள்ள கில்லி’ படத்தின் டிரெய்லர் ஜூலையில் வெளியாகிறது.
ஶ்ரீநாத் ராமலிங்கம் இயக்கத்தில் மைத்ரேயா, சாந்தினி, மைம் கோபி, இளவரசு உள்ளிட்டோர் நடித்துள்ள படம் அன்புள்ள கில்லி. இப்படத்தில் லாப்ரடார் வகை நாய் ஒன்று முக்கிய வேடத்தில் நடித்துள்ளது. கில்லி என்று பெயர் வைக்கப்பட்டுள்ள நாயின் மனக்குரலில் திரைக்கதை நகர்வது போல் கதை உருவாக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இந்த நாய்க்கு நடிகர் சூரி பின்னணி குரல் கொடுத்துள்ளார் என்பது கூடுதல் சிறப்பு. பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தின் டிரெய்லர் ஜூலை 3ஆம் தேதி வெளியாகிறது.
இதையும் படிங்க: ஓடிடியில் வரிசை கட்டும் படங்கள் - அதிர்ச்சியில் திரையரங்க உரிமையாளர்கள்!