உலகப் பெருந்தொற்றான கரோனா வைரஸ் ஏராளமான நாடுகளை வெகுவாகப் பாதித்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பொருளதாரமும் வீழ்ச்சியடைந்துள்ளது. இத்தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகள் இறங்கியுள்ளன.
இந்நிலையில் செய்தி நிறுவனம் ஒன்று, ஜெர்மன், பிரிட்டன், பிரான்ஸ், ஸ்பெயின், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கரோனா தொற்று அதிகமாக இறைச்சித் தொழிற்சாலைகளில் காணப்படுவதாகக் கூறியிருந்தது.
இச்செய்தியை குறிப்பிட்டு தனது சமூக வலைதளப் பக்கத்தில் நடிகை எமி ஜாக்சன், இறைச்சிச் சந்தைகள், இறைச்சிக் கடைகள், இறைச்சித் தொழிற்சாலைகள் என அனைத்தும் பல்வேறு வகையில் நோய்களைப் பெருக்கும் இடங்கள். இந்த இடங்கள் காற்றோட்டமாக இல்லாததால்தான் அங்கிருப்பவர்களுக்கு நோய் எளிதில் பரவுகிறது என்கிறார்கள்.
அப்படியென்றால் இதுபோன்ற சூழல் மிருகங்களுக்கு மட்டும் சிறந்ததா? இறைச்சிக் கூடங்களுக்குப் பின் இருக்கும் உண்மையை ஏன் இன்னும் மறைக்கிறார்கள். அந்தச் சுவர்களுக்குப் பின் என்ன நடக்கிறது அவை மோசமான நோய்கள் நிறைந்திருக்கும் பயங்கரமான கூடாரங்கள். இறைச்சிக் கூடங்களில்தான் கரோனா பரவுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
எமி ஜாக்சன் விலங்குகள் நல அமைப்பான பீட்டாவின் தூதராகச் செயல்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.