இயக்குநர் ராஜன் மலைச்சாமி இயக்கத்தில் அஸ்மிதா, மவுனிகா ரெட்டி, பந்தா பாண்டி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் பூதமங்கலம் போஸ்ட். இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குநர் பாக்யராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அப்போது அதில் பேசிய இயக்குநர் பாக்யராஜ், ''அமிதாப் பச்சன் என்னுடைய 'முந்தானை முடிச்சு' படத்தை விரும்பிக் கேட்டதால், படத்தை அவருக்கு போட்டுக் காண்பித்தேன். அப்போது அவர் இந்தப் படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய விரும்பி என்னிடம் கேட்டார். இருப்பினும் ரசிகர்கள் என்னை அக்க்ஷன் படத்தில் பார்த்து விரும்பிவிட்டதால், இப்படத்தில் நடித்தால் என்னை ஏற்றுக்கொள்வார்களா? என்றும் கேட்டார்.
மேலும், அப்படத்தில் நடிக்க தயாராக இருப்பதாகவும், சம்பளம் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை என்றார் அமிதாப். அவர் முதலில் ஏன் அப்படி சொல்கிறார் என்று எனக்கு தெரியவில்லை. பிறகு தான் அதற்கான விளக்கத்தை அவர் கொடுத்தார். அதாவது, ஒருவேலை படத்திற்கு வரவேற்பு கிடைக்கவில்லை என்றால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படக்கூடாது என்று எண்ணி இவ்வாறு முடிவு செய்ததாகக் கூறினார். இருப்பினும் தயாரிப்பாளர் படத்திற்கு ஒற்றுக்கொள்ளவில்லை என்பதால் படத்தைத் தொடர முடியவில்லை'' என்று பேசியுள்ளார்.
இதையும் படிங்க: 'உங்கள் கண்கள் என்னை வெட்கப்பட வைக்கிறது' - காதல் குறித்து குஷ்பூ நெகிழ்ச்சி