ETV Bharat / sitara

புனித் ராஜ்குமாருக்கு அஞ்சலி செலுத்திய அல்லு அர்ஜூன்! - Tribute to puneeth Rajkumar

மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் வீட்டிற்கு நேற்று (பிப்.3) சென்ற தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன், அவரது திருவுருவப் படத்துக்கு மலர்த் தூவி மரியாதை செலுத்தினார்.

http://10.10.50.85:6060///finalout4/tamil-nadu-nle/finalout/04-February-2022/14370978_allu.JPG

author img

By

Published : Feb 4, 2022, 6:19 PM IST

பெங்களூரு (கர்நாடகா): டோலிவுட் சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜூன், பெங்களூருவில் உள்ள மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் வீட்டிற்கு நேற்று (பிப்.3) சென்றார்.

அப்போது புனித் ராஜ்குமாரின் மனைவி, சகோதரர் சிவராஜ்குமார் ஆகியோரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட அல்லுஅர்ஜூன், "புனித்துக்கு எனது பணிவான வணக்கங்கள். ராஜ்குமாரின் குடும்பத்தினர், நண்பர்கள், நலம் விரும்பிகள் மற்றும் ரசிகர்களுக்கு எனது மரியாதை" என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அப்போது அதில் பதிவிடப்பட்டிருந்த புகைப்படத்தில் புனித் ராஜ்குமாரின் திருவுருவப் படத்திற்கு, அல்லு அர்ஜூன் மலர்த் தூவி மரியாதை செலுத்துவது தெரிகிறது.

புனித் ராஜ்குமாருக்கு இரங்கல் தெரிவித்தது குறித்த அல்லு அர்ஜூனின் ட்விட்டர் பதவு

புனித் ராஜ்குமார் கடந்த அக்டோபர் 29, 2021 அன்று மாரடைப்பால் உயிரிழந்தார். அவர் உயிரிழந்தபோது அவருக்கு வயது 46. அவரது மறைவுக்கு நாட்டிலுள்ள பல பிரபலங்கள் தற்போதுவரை இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'வீரமே வாகை சூடும்' திரையரங்குகளில் வெளியீடு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.