ETV Bharat / sitara

அல்லு அர்ஜுனின் 'புஷ்பா' படைத்த புதிய சாதனை! - புஷ்பா பட டீசர்

சென்னை: 24 மணிநேரத்தில் அதிகம் பார்க்கப்பட்ட ஐந்து டீசர்களில் முதலிடத்தில் அல்லு அர்ஜூனின் 'புஷ்பா' பட டீசர் இடம்பெற்றுள்ளது.

pushpa
pushpa
author img

By

Published : Apr 19, 2021, 12:56 PM IST

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன், சுகுமார் இயக்கத்தில் உருவாகும் 'புஷ்பா' படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 'ரங்கஸ்தலம்' படத்துக்குப் பிறகு சுகுமார் இயக்கும் படம் என்பதால் இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

'புஷ்பா' படத்தில் அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனாவும், வில்லானாக ஃபகத் பாசிலும் நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் உருவாகும் இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தேவி ஸ் ரீபிரசாத் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தை இந்த ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். கரோனா அச்சுறுத்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இதன் படப்பிடிப்பு தற்போது தொடர்ந்து முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் அல்லு அர்ஜூன் கதாபாத்திரத்தின் டீசர், அவரது பிறந்தநாளான ஏப்ரல் 7ஆம் தேதி வெளியானது.

இந்த டீசர் வெளியான 24 மணி நேரத்தில் 25 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும், 792 ஆயிரத்துக்கும் அதிகமான லைக்குகளையும் பெற்றது. இந்தநிலையில், 24 மணி நேரத்தில் அதிகம் பார்க்கப்பட்ட ஐந்து டீசர்களில் முதலிடத்தில் புஷ்பா டீசர் தற்போது உள்ளது. முன்னதாக மகேஷ்பாபுவின் 'சரிலேரு நீக்கெவ்வரு', இயக்குநர் ராஜமெளலியின் 'ஆர்ஆர்ஆர்', பிராபஸின் 'சாஹோ' உள்ளிட்ட டீசர்கள் முதலிடத்தைப் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.