ETV Bharat / sitara

விளம்பரத்தால் அல்லு அர்ஜுனுக்கு அரசு தரப்பில் வந்த புதிய சிக்கல் - அல்லு அர்ஜுன் விளம்பரம்

தெலங்கானா அரசு பேருந்துகளை அவமதிக்கும் வகையில் நடிகர் அல்லு அர்ஜுன் விளம்பரத்தில் நடித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அல்லு அர்ஜுன்
அல்லு அர்ஜுன்
author img

By

Published : Nov 11, 2021, 11:46 AM IST

திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் தற்போது, விளம்பர படங்களில் அதிகமாகக் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டனர். ரசிகர்களும் தாங்கள் விரும்பும் பிரபலங்கள் குறிப்பிட்ட விளம்பரத்தில் நடிப்பதால், அந்த பொருள்களை நம்பிக்கையின் அடிப்படையில் வாங்குகின்றனர்.

ஒரு சில விளம்பரங்கள் அரசையும், அரசின் சேவைகளையும் தவறாக சித்தரிக்கிறது. இதனால் பல்வேறு குழப்பங்கள் ஏற்படுகிறது. இதுபோன்ற சம்பவம் தான் தற்போது தெலங்கானா மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. நடிகர் அல்லு அர்ஜுன் இருசக்கர வாகனம் மூலம் பயணிகளை ஏற்றிச்செல்லும் ராபிடோ ஆப் விளம்பரத்தில் நடித்திருக்கிறார்.

அதில் தெலங்கானா அரசு போக்குவரத்து பேருந்துகள் எப்போதும் கூட்ட நெரிசலாக செல்வதாகவும், அதற்குப் பதிலாக ராபிடோ பயன்படுத்துமாறு வசனம் பேசியுள்ளார்.

இதற்கு தெலங்கானா அரசு போக்குவரத்துக் கழகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் இதுபோன்ற விளம்பரங்களில் நடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.