ETV Bharat / sitara

'வாத்தி கம்மிங்' பாடலுக்கு உற்சாகத்துடன் நடனமாடிய அலிஷா அப்துல்லா! - அலிஷா அப்துல்லா

சென்னை: 'வாத்தி கம்மிங்' பாடலுக்கு மருத்துவமனையில் இருந்தவாறே பைக் ரேஸர் அலிஷா அப்துல்லா நடனமாடிய காணொலியை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

alisha abdullah
alisha abdullah
author img

By

Published : Mar 29, 2021, 10:48 PM IST

இந்தியாவின் முதல் பெண் தேசிய ரேஸிங் சாம்பியன் என்ற பெருமையைப் பெற்றவர் அலிஷா அப்துல்லா. இவர் தமிழில் வெளியான 'இரும்புத்திரை' படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். அதுமட்டுமல்லாது இவர் அஜித்தின் தீவிர ரசிகையும்கூட.

அதே சமயத்தில் தளபதி விஜய் நடித்த படங்களைப் பார்த்து மனதாரப் பாராட்டி தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுவருவார். மேலும் பெண்களுக்கு எதிரான செயல்கள், சமூக விரோதச் செயல்களைக் கண்டாலும் அதற்கு எதிராகவும் குரல் கொடுப்பவர்.

சமீபத்தில் அலிஷா அப்துல்லாவுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் குணம்பெற்றுவருகிறார். இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் தனது தோழிகளுடன் 'மாஸ்டர்' படத்தின் 'வாத்தி கம்மிங்' பாடலுக்கு நடனமாடிய காணொலியைப் பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்த தல -தளபதி ரசிகர்கள் அலிஷா விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வாழ்த்துத் தெரிவித்துவருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.