ETV Bharat / sitara

ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் கொடுத்து உதவிய அக்ஷய் குமார் குடும்பம்

நடிகர் அக்ஷய் குமார் அவரது மனைவி இணைந்து 100 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் கொடுத்து உதவி செய்துள்ளனர்.

அக்‌ஷய் குமார்
அக்‌ஷய் குமார்
author img

By

Published : Apr 28, 2021, 2:14 PM IST

கரோனா பரவல் இரண்டாவது அலையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, டெல்லி, தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம் எனப் பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை, மருத்துவமனைகளில் படுக்கை பற்றாக்குறை போன்றவற்றால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கோவிட் -19 தொற்று நோய்க்கு எதிரான போராட்டத்திற்குப் பங்களிக்கும் வகையில் அக்ஷய் குமார், அவரது மனைவி ட்விங்கிள் கண்ணா இணைந்து 100 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை நன்கொடையாக அளித்துள்ளனர். இவர்களுடன் டைவிக் அறக்கட்டளை 120 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை நன்கொடையாக வழங்க மொத்தம் 220 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து அக்‌ஷய் குமாரின் மனைவி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கடந்த சில வாரங்களாக எனது சொந்த குடும்ப உறுப்பினர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. அவர்களுடன் என்னால் அதிக நேரம் இருக்க முடியவில்லை. உங்களால் முடிந்த உதவிகளை அனைவருக்கும் செய்யுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அக்‌ஷய் குமார் மனைவி வெளியிட்ட பதிவு
அக்‌ஷய் குமார் மனைவி வெளியிட்ட பதிவு

முன்னதாக மருத்துவ உதவி, ஆக்சிஜன் வழங்குவதற்காகக் கவுதம் கம்பீரின் அறக்கட்டளைக்கு அக்ஷய் குமார் 1 கோடி ரூபாய் நன்கொடை அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.