பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான 'Man vs Wild' நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதிலும் பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்த நிகழ்ச்சியை பியர் கிரில்ஸ் தொகுத்து வழங்குகிறார்.
![Akshay Kumar](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/akshay-1_2901newsroom_1580304042_1021.jpg)
இந்த நிகழ்ச்சியில் கடந்தாண்டு பிரதமர் மோடி கலந்துகொண்டார். அவரைத்தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினி நேற்று கலந்துகொண்டார். தற்போது பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் கலந்துகொண்டிருக்கிறார். இதில் பங்கேற்க அக்ஷய் குமார் மும்பையில் இருந்து மைசூருக்கு விமானத்தில் வந்து இறங்கினார். பின் அக்ஷய் குமாரும் பியர் கிரில்ஸும் பந்திப்பூர் தேசிய புலிகள் காப்பகத்திற்கு சென்றனர். அதற்கு முன்பு அக்ஷய் குமாருடன் வனத்துறை அலுவலர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
![Akshay Kumar](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/akshay-2_2901newsroom_1580304042_856.jpg)
நேற்று இதில் கலந்துகொண்ட ரஜினிக்கு அங்கிருந்த சிறிய முள் செடியால் காயம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து படப்பிடிப்பை முடித்துக்கொண்டு விரைவாக சென்னை திரும்பினார் ரஜினி.
இதையும் வாசிங்க: எனக்கு காயமா? ரஜினிகாந்த விளக்கம்