ETV Bharat / sitara

‘ராட்சசன்’ படத்தையும் விட்டு வைக்காத அக்‌ஷய் - akshay kumar in remake of ratsasan

ராட்சசன் இந்தி ரீமேக்கில் அக்‌ஷய் குமார் முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

akshay kumar in remake of ratsasan
akshay kumar in remake of ratsasan
author img

By

Published : Jun 29, 2021, 7:00 PM IST

பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் அக்‌ஷய் குமார். எந்திரன் 2.0 படத்தில் பக்‌ஷிராஜனாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக அறியப்படுபவர். இவர் ‘ராட்சசன்’ பட ரீமேக்கில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

2018ஆம் ஆண்டு ராம்குமார் இயக்கத்தில் விஷ்னு விஷால், அமலா பால் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வெளியான திரைப்படம் ‘ராட்சசன்’. சைக்கோ த்ரில்லர் ரகத்தில் உருவாகியிருந்த இத்திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. ஜிப்ரானின் இசையும், விறுவிறுப்பான திரைக்கதையும் இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணங்களாக அமைந்தன. அதுமட்டுமில்லாத வில்லன் கதாபாத்திரம் காண்போரை மிரளச் செய்தது.

தற்போது இப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளது. அதில் விஷ்னு விஷால் கதாபாத்திரத்தில் அக்‌ஷய் குமார் நடிக்கவுள்ளார். மற்ற நடிகர்கள் விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘ராட்சசன்’ படத்தையும் விட்டு வைக்காத அக்‌ஷய்

ராஜமௌலியின் ‘விக்ரமார்க்குடு’, ராகவா லாரன்ஸின் ‘காஞ்சனா’ ஆகிய படங்களின் ரீமேக்கில் அக்‌ஷய் குமார்தான் நடித்திருந்தார். தற்போது ராட்சசன் படத்தை தேர்வு செய்திருக்கிறார். தென்னிந்திய படங்களை அதிகமாக ரீமேக் செய்தவர்கள் பட்டியலில் முதலிடம் பிடிக்கும் எண்ணத்தில் இருப்பார் போல.

இதையும் படிங்க: பாரதிராஜா குரலுக்கு பெருகும் ஆதரவு - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.