தென்னிந்திய டிஜிட்டல் தளமான ட்ரெண்ட் லவுட் நிறுவன தயாரிப்பில் இயக்குநர் ராஜமூர்த்தி இயக்கத்தில், நடிகை அக்ஷரா ஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் 'அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு'. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய்சேதுபதி வெளியிட்டிருந்தார்.
அக்ஷரா ஹாசன் நாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில், பிரபல பாடகி உஷா உதுப் அவருக்கு பாட்டியாக நடிக்கிறார். இவர்களோடு மால்குடி சுபா, அஞ்சனா ஜெயப்பிரகாஷ், ஜானகி சபேஷ் கலைராணி, ஷாலினி விஜயகுமார், சித்தார்தா சங்கர், சுரேஷ் மேனன், ஜார்ஜ் மரியன் மற்றும் கிரன் கேஷவ் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.
தற்போது இப்படத்தின் டீஸர் வெளியாகி உள்ளது. பவித்ரா என்னும் கதாபாத்திரத்தில் அக்ஷரா ஹாசன் நடித்திருக்கிறார். இப்படத்தில் ஒரு விஷயத்தில் முடிவெடுக்கும்போது இளம் பெண்களுக்கு ஏற்படும் குழப்பங்களை திரைப்பட டீஸர் வெளிப்படுத்தியுள்ளது.
விரைவில் படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.