ETV Bharat / sitara

சீனாவில் ரூ. 100 கோடி ஈட்டிய அஜித் பட தயாரிப்பாளர் - ஸ்ரீதேவி

’நேர்கொண்ட பார்வை’ படத்தை தயாரிக்கும் போனி கபூரின் திரைப்படம் சீனாவில் 100 கோடி ரூபாய் ஈட்டியுள்ளது.

mom movie
author img

By

Published : May 26, 2019, 2:20 PM IST

Updated : May 26, 2019, 3:49 PM IST

2017ஆம் ஆண்டு ரவி உத்யவார் இயக்கத்தில் ஸ்ரீதேவி நடித்து வெளியான திரைப்படம் ‘மாம்’. இதில் நவாஸுதீன் சித்திக், அக்‌ஷய் கண்ணா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தனர். கிரிஷ் கோலி இந்தப் படத்துக்கு திரைக்கதை எழுதியிருந்தார். ஜூலை 7ஆம் தேதி இத்திரைப்படம் சீனா தவிர்த்து உலக அளவில் வெளியானது. இந்தப் படத்தில் நடித்ததற்காக ஸ்ரீதேவிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த ஆண்டு மே 10ஆம் தேதி ‘மாம்’ திரைப்படம் சீனாவில் வெளியிடப்பட்டது.

mom movie
மாம் திரைப்படம்

சீனாவில் வெளியான இத்திரைப்படம் இதுவரையில் ரூ. 100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இது குறித்து படத்தின் தயாரிப்பாளரும், ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர், ’மாம்’ திரைப்படம் சீனாவில் 100 கோடி வசூல் செய்துள்ளது. ஸ்ரீதேவி மீது நீங்கள் கொண்டிருக்கும் காதலுக்கு நன்றி. ரசிகர்கள் #SrideviScoresCentury என்ற ஹேஸ்டேக்கை உருவாக்கியிருப்பதைக் காண முடிந்தது என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Intro:Body:

MoM movie 

Conclusion:
Last Updated : May 26, 2019, 3:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.