'நேர்கொண்ட பார்வை', வலிமை திரைப்படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக போனிகபூர் தயாரிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிக்க உள்ளதாக போனி கபூர் தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
இப்படத்தில், எதிர்மறை கதாபாத்திரத்தில் அஜித் நடிக்க உள்ளதாகவும், ஜிப்ரான் படத்திற்கு இசையமைக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை திரைப்படம் 2022ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அண்மையில், அறிவித்திருந்தது. மூன்றாவது முறையாக இந்தக் கூட்டணி அமையுமா என்பது குறித்தான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: சமூக வலைதளத்தில் 'வலிமை'யான சாதனை படைக்கும் 'நாங்க வேற மாறி'!