சென்னை: உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்ற பிறகு, ‘வலிமை’ திரைப்படம் மார்ச் 25 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் ஜீ5 ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது.
2022 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமாக கருதப்படும் வலிமை படத்தில் அஜித் குமார் ஐபிஎஸ் அதிகாரி அர்ஜூனாகவும், ஹுமா குரேஷி நாயகியாகவும் நடித்துள்ளனர். ஒரு அருமையான போலீஸ் கதையோடு, வலுவான ஆக்ஷன் மற்றும் உணர்வுபூர்வமான காட்சிகள் இந்தப் படத்தை ஒரு முழுமையான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக மாற்றியுள்ளது.
இப்படத்தில் நடிகர் அஜீத் குமாரின் அசத்தலான திரை ஆளுமை மற்றும் நடிகர் கார்த்திகேயாவின் சாத்தானிய அவதாரம் ஆகியவை ஒட்டுமொத்த திரையரங்குகளையும் அதிர வைத்தது. வினோத் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை, ஜீ ஸ்டுடியோஸுடன் இணைந்து பேவியூ ப்ராஜெக்ட் எல்எல்பி சார்பில் போனி கபூர் தயாரித்துள்ளார்.
இப்படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார், நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இதையும் படிங்க: 'பீஸ்ட்' திரைப்படம் - ஏப்ரல் 13 ஆம் தேதி ரிலீஸ்