'தல' அஜித் சில ஆண்டுகளுக்கு முன்பு தனது ரசிகர் மன்றத்தைக் கலைத்தார். அது மட்டுமின்றி, அனைத்து சமூக வலைதள பக்கங்களில் இருந்தும் விலகினார். இருப்பினும் அவரது பெயரில் பல்வேறு போலிக் கணக்குகள் இயங்கி வருகின்றன.
அஜித் பெயரில் நேற்று போலியாக ஃபேஸ்புக் கணக்கு ஒன்று தொடங்கப்பட்டது. அதில் அஜித்குமாரின் அறிக்கை போல ஒன்று வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில், "நான் பல ஆண்டுகளுக்கு முன் அனைத்து சமூக வலை தளங்களில் இருந்தும் ஒதுங்கி இருந்ததுடன், எனக்கான மன்றங்களையும் கலைத்திருந்தேன். இதற்கான காரணங்களை பலமுறை நான் தெரிவித்திருந்தேன். மீண்டும் சமுக வலை தளங்கில் இணைய வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது'' என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனால் அஜித் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தனர். இருப்பினும் சிலர் அது போலிக் கணக்கு என்று கூறினார்.
-
Legal notice from the legal team of Mr Ajith kumar. Tamil.version.. pic.twitter.com/zFuAcIEs88
— Suresh Chandra (@SureshChandraa) March 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Legal notice from the legal team of Mr Ajith kumar. Tamil.version.. pic.twitter.com/zFuAcIEs88
— Suresh Chandra (@SureshChandraa) March 7, 2020Legal notice from the legal team of Mr Ajith kumar. Tamil.version.. pic.twitter.com/zFuAcIEs88
— Suresh Chandra (@SureshChandraa) March 7, 2020
இந்நிலையில் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா அது அஜித்தின் உண்மையான முகநூல் பக்கம் இல்லை என்று குறிப்பிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ''அஜித்குமார் பெயரில் ஒரு போலியான கணக்குத் தொடங்கப்பட்டு, அந்த கணக்கில் அஜித் கையெழுத்திட்டது போல் ஒரு போலி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த கடிதத்தை அஜித் வெளியிடவில்லை என்றும் அந்த கடிதத்தில் தெரிவித்த கருத்துகள் யாவும் மறுக்கப்படுகின்றன'' என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் நடிகர் அஜித் குமாரின் கையொப்பத்தை இட்டு, அறிக்கை வெளியிட்ட குற்றவாளிகளை வெகுவிரைவில் கண்டுபிடிப்போம் எனவும், அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன்முலம் அஜித் சமூக வலைதளங்கில் இணையவில்லை என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது.
இதையும் படிங்க: 'எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்' வொர்க் அவுட்டுக்கு முன்னும்; பின்னும் - புகைப்படம் வெளியிட்ட ஆர்யா