சிறுத்தை சிவா இயக்கத்தில் தொடர்ந்து நடித்துவந்த அஜித், தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் தொடர்ந்து நடித்து வருகிறார். வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என சிறுத்தை சிவாவுக்கு 4 படங்களை கொடுத்தார் அஜித். ‘விஸ்வாசம்’ வெற்றியைத் தொடர்ந்து ‘சதுரங்க வேட்டை’ புகழ் ஹெச். வினோத் இயக்கத்தில் ‘நேர்கொண்ட பார்வை’ என்ற ரீமேக் படத்தில் நடித்தார். இந்தப் படத்தை போனி கபூர் தயாரித்திருந்தார்.
‘நேர்கொண்ட பார்வை’ வெளியாகும் முன்பே இதே டீம் மீண்டும் இணையவிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதைத் தொடர்ந்துதான் ‘வலிமை’ திரைப்படம் உருவானது. தற்போது வலிமை வெளியாகும் முன்பே அஜித்தின் அடுத்த படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது. மீண்டும் இதே டீம் இணைகிறார்களாம்.
‘வலிமை’ போல நீண்ட நாட்கள் எடுத்துக்கொள்ளாமல் இந்தப் படத்தை சீக்கிரம் முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்தத் திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 19 years of youth: ப்ரியமுடன் வின்சென்ட் செல்வா