சென்னை: தனது உடல் முழுவதும் நடிகர் அஜித்தின் படத்தின் பெயர்களைப் பச்சைக்குத்திக்கொண்ட ரசிகர் தற்கொலை செய்துகொண்டதாக சமூக வலைதளத்தில் அஜித்தின் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.
'தல' என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் நடிகர் அஜித்குமார் தனது ரசிகர் மன்றத்தைக் கலைத்தபோதிலும் அவருக்கு நாளுக்கு நாள் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது.
பிரகாஷ் என்ற தீவிர ரசிகர் ஒருவர், நடிகர் அஜித் பெயரையும் அவரது பெருமைகளையும் புகழ்பாடி தனது உடலில் பச்சை குத்திக்கொண்டார். இதுதொடர்பாக காணொலி ஒன்று சமீபத்தில் வெளியாகி வைரலானது.
இவர், தல அஜித்-தான் தனது கடவுள் என்று உடலின் ஒரு பகுதியில் பச்சை குத்திக்கொண்டுள்ளார். இந்த நிலையில் பிரகாஷ் தற்கொலை செய்துகொண்டார் எனவும், அவரது மறைவுக்கு இரங்கல் தெரவிப்பதாகவும் அஜித் ரசிகர்கள் ட்விட்டரில் #ripprakashthala என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கியுள்ளனர்.
இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. பிரகாஷின் தற்கொலை குறித்த காரணம் எதுவும் தெரியாத நிலையில் அஜித் ரசிகரின் தற்கொலை செய்தி அதிகமாகப் பகிரப்பட்டுவருகிறது. அஜித் குறித்த எந்தச் செய்தியானாலும் ட்ரெண்டிங்கில் முன்னிலைப்படுத்திவரும் அஜித்தின் ரசிகர்கள், அவரது தீவிர ரசிகர் ஒருவரின் இறப்பு குறித்த செய்தியையும் வைரலாக்கியுள்ளனர்.
இதையும் படிங்க: 'ஹாட்' குளியல் உடையில் ரைசா வில்சனின் லேட்டஸ் க்ளிக்!