ஆண்டுதோறும் இந்தியத் திரைப்படத்தில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்குப் பல்வேறு பிரிவுகளில் தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுவருகின்றது.
அந்த வகையில் 2020ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டது. அதில், தல அஜித்துக்குப் பன்முகத்திறமை கொண்ட நடிகர் என்ற பிரிவில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு அஜித் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புத்தாண்டு அன்று வெளியான இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களுக்கு நற்செய்தியாக அமைந்துள்ளது.
மேலும், அந்த அறிவிப்பில் சிறந்த நடிகருக்கான விருது தனுஷுக்கும், சிறந்த நடிகைக்கான விருது ஜோதிகாவுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இருவரது ரசிகர்களும் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர்.
தாதா சாகேப் விருது (கோலிவுட்) யார் யாருக்கு எந்தெந்தப் பிரிவுகளில்...
பிரிவு | விருது பெறுவோர் |
சிறந்த திரைப்படம் | டூலெட் |
சிறந்த நடிகர் | தனுஷ் (அசுரன்) |
சிறந்த நடிகை | ஜோதிகா (ராட்சசி) |
சிறந்த இயக்குநர் | பார்த்திபன் (ஒத்த செருப்பு) |
சிறந்த இசையமைப்பாளர் | அனிருத் |
பன்முகத்திறமை கொண்ட நடிகர் | அஜித் குமார் |