இந்தியில் பிரமாண்டப் பொருட்செலவில் நடிகர் அஜய் தேவ்கன், கஜோல், சைஃப் அலி கான் நடிப்பில் தயாராகியிருக்கும் படம் 'தனஜி - த அன்சங் வாரியர்'.
இது அஜய்யின் நூறாவது படமென்பதால் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படத்தில் தன் காதல் மனைவி கஜோலுடனே அஜய் நடித்திருப்பது கூடுதல் சிறப்பு.
வரும் ஜனவரியில் படம் இந்தியில் வெளியாகும் எனக் கூறப்பட்ட நிலையில், அதே தேதியில் மராத்தியிலும் இப்படம் வெளியாகும் என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: 'தனஜி- த அன்சங் வாரியர்' - ட்ரெய்லர் வெளியீடு