ETV Bharat / sitara

கடந்த ஆண்டு வெற்றிப் படத்தை நினைவு கூர்ந்த அஜய் தேவ்கன் - பாலிவுட் செய்திகள்

தன் ’தே தே பியார் தே’ திரைப்படம் வெளியாகி ஒரு வருடம் நிறைவு பெற்றுள்ளதை அடுத்து, படம் குறித்த நினைவுகளை நடிகர் அஜய் தேவ்கன் பகிர்ந்துள்ளார்.

தே தே பியார் தே
தே தே பியார் தே
author img

By

Published : May 18, 2020, 9:19 AM IST

பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் நடிப்பில் சென்ற ஆண்டு வெளிவந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய திரைப்படம், ’தே தே ப்யார் தே’. ரொமான்டிக் காமெடி வகையைச் சேர்ந்த இந்தப் படம் வெளிவந்து ஒரு வருடம் முடிந்துள்ள நிலையில், இப்படம் குறித்த நினைவுகளை, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அஜய் தேவ்கன் பகிர்ந்துள்ளார்.

51 வயது நிரம்பிய அஜய், படத்தின் நடிகைகள் தபூ, ரகுல் பிரீத் சிங் ஆகியோரை டேக் செய்து மகிழ்ச்சித் தெரிவித்துள்ளார்.

”வழக்கத்திற்கு மாறான காதல் உறவு குறித்து, அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி பேசிய இந்தத் திரைப்படம், குடும்பத்திற்கே என்றைக்கும் முதலிடம் என்பதையும் உணர்த்தியது” எனக் குறிப்பிட்டு படம் குறித்து அஜய் பதிவிட்டுள்ளார்.

அகில் அலி இயக்கிய இத்திரைப்படத்தின் கதை, 50 வயது நிரம்பிய விவாகரத்து பெற்ற ஆண் ஒருவர், 26 வயது நிரம்பிய பெண்ணைக் காதலிக்கும்படி அமைக்கப்பட்டிருந்தது. இதில் தபூ, அஜயின் முதல் மனைவி கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார்.

தன் மகள் வயதை ஒத்த பெண்ணுடன் காதலில் விழும் நபரைப் பற்றிய இந்தத் திரைப்படம், வெளிவந்தபோது பெரும் சர்ச்சைக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : அமேசான் பிரைமில் வெளியாகும் ஏழு இந்திய படங்கள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.